Don't Miss!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட...அவரா இவரு...பாக்யலட்சுமி சீரியலில் பிரபல டாப் ஹீரோவின் மகன்
சென்னை : விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்படும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. குடும்ப தலைவிகளின் பிரச்சனைகள், அவர்களின் சவால்கள், மன குமுறல்களை பிரதிபலிப்பதாக இந்த சீரியல் இருப்பதால் பெண்களின் அமோக ஆதரவை பெற்ற சீரியல் இது.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியல் கடந்த சில நாட்களாக போரடிப்பதை போல் உள்ளது. இப்படி பட்ட உணர்வு ஏற்படும் போதெல்லாம், பாக்யா ஏதாவது சாதனை செய்து ஜெயிப்பதை போல் காட்டி, மீண்டும் சீரியலை தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார்கள்.
மியூசிக்கும்
தெரியாது
….
நடிக்கவும்
வராது…
உணர்ச்சி
பொங்க
பேசிய
விஜய்
ஆண்டனி
!

கேலி செய்யப்படும் பாக்யா
தனது தோழி ராதிகா கார் வாங்குவதற்காக ஆபீஸ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எல்லாம் தனது அக்கவுண்டிற்கு மாற்றுகிறார் கோபி. அதே சமயம் செல்வி சொல்லும் பொய்யால் 1000 பேருக்கு சமையல் செய்யும் ஆர்டர் கிடைத்தும், அதை எப்படி செய்ய போகிறோம் என திணறி, வீட்டில் உள்ளவர்களின் கேலிக்கு ஆளாகிறார் பாக்யா.

ஓகே சொல்லும் பாக்யா
அம்மா பாக்யாவிற்கு நம்பிக்கை தருகிறார் இரண்டாவது மகன் எழில். அதே சமயம் கணவர் கோபி மற்றும் மாமியாரிடம் திட்டு வாங்கும் பாக்யா, வைராக்கியமாக சமையல் ஆர்டரை எடுத்து செய்ய சம்மதம் சொல்கிறார். பாக்யா சாப்பாடு டெலிவரி செய்யும் வீடுகளில் பணக்கார பிசினல்மேன் ஒருவர் பாக்யாவை நேரில் அழைத்து பாராட்டுகிறார். அவர் தான் 1000 பேருக்கு சமையல் செய்யும் ஆர்டரை பாக்யாவிற்கு கொடுக்கிறார்.

யார் இந்த பிசினஸ்மேன்
யார் இந்த பிசினஸ்மேன், சம்மந்தம் இல்லாம் எதற்காக இந்த கேரக்டரை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்ற கேள்வி இந்த சீரியலை பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுகிறது. பாக்யாவை தொழில் ரீதியாக முன்னேற வைப்பதற்காக என்றாலும், யார் இவர் என்ற கேரக்டர் அனைவரின் மனதிலும் எழுகிறது.
Recommended Video

அவரா இவர்
தற்போது பிசினஸ் மேன் ரோலில் நடிப்பவருடன் இணைந்து பாக்யா எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அத்துடன் இவர் யார் என்ற விபரமும் வெளியாகி உள்ளது. பிசினஸ்மேன் ரோலில் நடிப்பவர் வேறு யாருமில்லை பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் தான்.

ஆச்சரியப்படும் ரசிகர்கள்
பழைய தமிழ் சினிமாக்களில் துடிப்பான ஹீரோவாக, துப்பறியும் ஹீரோவாக நடித்து தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என புகழப்பட்டவர் ஜெய்சங்கர். அப்படிப்பட்ட மாபெரும் நடிகரின் மகன் சீரியலில் நடிக்க வந்துள்ளார் என்பது பலரையும் அடடே என ஆச்சரியமாக சொல்ல வைத்துள்ளது.

விஜய் டிவி.,க்கு பாராட்டு
இதற்கு முன் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபுவை மெளனராகம் சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி. தற்போது பாக்யலட்சுமி சீரியல் மூலம் ஜெய்சங்கரின் மகனையும் நடிக்க அழைத்து வந்துள்ளனர். இதனை பலரும் பாராட்டி, வரவேற்பு தெரிவித்துள்ளனர்.