இப்படியா நடந்துப்பீங்க.. சாக்ஷிக்கு அட்வைஸ் செய்த சேரன்!

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்த மீராவிடம் சாக்ஷியும் அபிராமியும் நடந்துக்கொண்ட விதம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக ஒருவர் வருவது போன்ற ப்ரமோ வெளியானது. இதனால் யார் அந்த நியூ என்ட்ரி என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியது.

பிக்பாஸ் வீடே பாட்டும் கும்மாளமுமாக இருந்த நேரத்தில் வீட்டிற்குள் என்ட்ரியானார் மீரா மிதுன். அவரை பார்த்ததுமே சாக்ஷிக்கும் அபிராமிக்கும் பிபி எகிறிவிட்டது.

கூட்டு சேர்ந்த ஷெரின்

கூட்டு சேர்ந்த ஷெரின்

ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவருடன் பேச சாக்ஷியும் அபிராமியும் ஓரம் கட்டி வீட்டுக்குள் சென்றுவிட்டனர். பின்னர் மீராவை வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் ஷெரினும் கூட்டு சேர்ந்துவிட்டார்.

பர்சனல் பிரச்சனையாம்

பர்சனல் பிரச்சனையாம்

மீராவை சந்திக்கும் ஒவ்வொரு இடத்திலும் அபிராமியும் சாக்ஷியும் அவர் மீது வன்மத்தை கக்கினர். காரணம் ஏதோ அவர்களுக்குள் பர்சனல் பிரச்சனை என்கிறார்கள்.

ஹவுஸ் மேட்ஸ்க்கு புரிந்துவிட்டது

ஹவுஸ் மேட்ஸ்க்கு புரிந்துவிட்டது

ஆனால் அபிராமி மற்றும் சாக்ஷியின் நடத்தை அவர்களுக்கு மீராவின் என்ட்ரி இம்மியளவும் பிடிக்கவில்லை என்பதை காட்டுகிறது. இதனை மற்ற ஹவுஸ் மேட்ஸ்களும் உணர்ந்துள்ளனர்.

சேரன் அட்வைஸ்

சேரன் அட்வைஸ்

இதைத்தொடர்ந்து இப்படி நடந்துக்கொள்ளக் கூடாது என சாக்ஷிக்கு அட்வைஸ் செய்கிறார் சேரன். அப்போது மீரா போலித்தனமாக நடிக்கிறார் அப்படி இப்படி என குற்றச்சாட்டுகளை அடுக்கும் சாக்ஷி, பாத்ரூமில் அபிராமியிடம் சேரன் அட்வைஸ் குறித்து கூறுகிறார். முதலில் அடாவடியாக பேசும் அபிராமி பின்னர் ஆமாம் சாமி போடுகிறார்.

எங்கு போய் முடியபோகுதோ?

எங்கு போய் முடியபோகுதோ?

இப்படியாக சலசலப்புடனே முடிந்துள்ளது பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள். இன்னும் வரப்போகும் எபிசோடுகளில் இந்த சலசலப்பு எங்கு போய் முடியும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் இப்போதே எகிறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X