ஷாக்காகாதீங்க.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இயக்குநர் சேரன் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நேர்மையாக விளையாடி வருபவர் சேரன். மக்களின் ஆதரவையும் அதிகளவு பெற்றிருந்தார்.
தன்னை பற்றி மற்றவர்கள் தரக்குறைவாக பேசிய போதும் பொறுமையிழக்காமல் நிதானமாக நடந்துகொண்டவர் சேரன். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நாம் நாமலாகவே இருப்போம் என்று கூறி வந்தார்.

டாஸ்க்கில் சீரியஸ்
பாத்திரம் கழுவுவது, பாத்ரூம் கழுவுவது என தனக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டாலும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அதனை செவ்வனே செய்து வந்தார். எந்த டாஸ்க்காக இருந்தாலும் அதில் சீரியஸாக ஈடுபட்டவர் சேரன்.

உறவுக்கு முக்கியத்துவம்
குறிப்பாக யார் குறித்தும் புரணி பேசாமல் பிரச்சனையை தீர்க்கும் நோக்கோடு இருந்தார். மேலும் தன்னை அப்பா என்று அழைத்த லாஸ்லியாவை மகள் என்றே பாவித்த சேரன் அவருக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார்.

சேரன் வெளியேற்றம்
மக்கள் குடும்பத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க காரணமாக இருந்தவர் சேரன். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

மக்கள் அதிர்ச்சி
வாரம் தோறும் நாமினேஷன் முறையில் ஒருவர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் சேரன் வெளியேறியிருக்கிறார். மக்களிடம் பெரும் வரபேற்பையும் நல்ல மதிப்பையும் பெற்ற சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களுக்கு ஏமாற்றம்
கன்டென்ட் கொடுப்பதற்காக நான்கு பெண்களை காதலித்ததாக கூறிய கவினை வெளியேற்றுங்கள் வெளியேற்றுங்கள் என மக்கள் கொடு பிடிக்காத குறையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவரை வெளியேற்ற மனமில்லாத விஜய்டிவி, மக்களின் ஆதரவை பெற்ற சேரனை வெளியேற்றிருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











