அம்மா.. அப்பா பாசம்னா இப்படிதான் இருக்குமா? சேரனிடம் உணர்ந்ததை கூறி உருக வைத்த ஷெரின்!

Recommended Video

Bigg Boss Tamil : Promo 3: Sherin Family visit in BB House

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷெரின், தனது தாயிடம் அப்பா பாசம் என்றால் இப்படிதான் இருக்குமா என்று கேட்டு உருக வைத்து விட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குநர் சேரன், அந்த வீட்டின் சிறந்த தந்தையாக உள்ளார். லாஸ்லியா சேரனை பார்த்து என் அப்பா உங்களை போன்றுதான் இருப்பார் என்று கூறி, அவரை சேரப்பா சேரப்பா என்று அழைத்து வருகிறார்.

அவர்களின் அப்பா மகள் உறவில் அவ்வப்போது சில பிணக்குகள் வந்தாலும், சேரன் தனது மகளாக பாவிக்கும் லாஸ்லியாவை எந்த இடத்திலும் விட்டுக்கொடுப்பதில்லை.

அறிவுரை

அறிவுரை

அவர் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும், டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் வாழ்க்கைக்கு எது நல்லது, எப்படி பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அவருக்கு அறிவுரை வழங்கி வருகிறார் சேரன்.

கவின் மட்டும்தான்

கவின் மட்டும்தான்

லாஸ்லியாவிடம் எப்படி இருக்கிறாரோ அதே போலத்தான், ஷெரீன், தர்ஷன், முகென் உள்ளிட்டோரிடமும் பழகி வருகிறார். அவர்களும் அதனை நன்றாகவே உணர்ந்துள்ளனர். ஆனால் கவின் மட்டும்தான் அவரை புரிந்துகொள்ளாமல் உள்ளார்.

சேரனை புகழ்ந்த ஷெரின் அம்மா

சேரனை புகழ்ந்த ஷெரின் அம்மா

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷெரினின் அம்மா, சேரனின் காலில் விழச்சென்றதோடு, இவர் ரொம்பவும் நல்ல மனிதர் என புகழாரம் சூட்டினார். மேலும் தனது மகளிடமும் சேரன் குறித்து நல்ல விதமாகவே பேசினார்.

அப்பா போல் அறிவுரை

அப்பா போல் அறிவுரை

அப்போது தனது அம்மாவிடம் பேசிய ஷெரின், அம்மா, அவர் என்னிடம் ஒரு அப்பா போல பாசமாக நடந்து கொள்கிறார். எனக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

இந்த உணர்வு பிடித்திருக்கிறது

இந்த உணர்வு பிடித்திருக்கிறது

அவரை பார்த்த பிறகுதான் அப்பா பாசம் என்றால் இப்படிதான் இருக்குமோ என்று தோன்றுகிறது. எனக்கு இந்த உணர்வும் பாசமும் பிடித்திருக்கிறது. இப்போதுதான் அப்பாவை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது என்று கூறி உருக வைத்தார்.

இங்கு வந்தபிறகுதான் தெரிகிறது

இங்கு வந்தபிறகுதான் தெரிகிறது

அதற்கு ஷெரினின் அம்மா நீ என்னிடம் சொல்லியிருந்தால் நான் அழைத்து வந்திருப்பேனே என்றார். அப்பா என்றால் இப்படிதான் இருப்பார்களா என்றே எனக்கு இங்கு வந்து சேரன் சாரை பார்த்தப் பிறகுதான் தெரிந்தது என்று கூறினார்.

அற்புத உணர்வை கொடுத்த சேரன்

அற்புத உணர்வை கொடுத்த சேரன்

ஏற்கனவே சிறு வயதில் இருந்தே தான் தனது அப்பாவுடன் வளரவில்லை. அந்தப் பாசம் என்னவென்று இதுவரை உணர்ந்ததே இல்லை என்று கூறினார். இந்நிலையில் அந்த அற்புதமான உணர்வை ஷெரினுக்கு அளித்து தனது தந்தையை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியிருக்கிறார் சேரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X