குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன முதல் போட்டியாளர்.. ரசிகர்கள் வருத்தம்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளநிலையில், தற்போது நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தன்னுடைய கலக்கலான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
கடந்த இருவாரங்களாக சுவாரஸ்யமான எபிசோட்களை தந்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் எலிமினேஷன் காணப்பட்டது.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் முன்னிலையில் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவுற்ற நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது.

குக்குகள் மற்றும் கோமாளிகள்
கடந்த 3 சீசன்களாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக இருந்துவந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி, தற்போது தன்னுடைய 4வது சீசனை துவங்கியுள்ளது. 10 குக்குகள் மற்றும் கோமாளிகளுடன் இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளது. விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, காலயன், இயக்குநர் கிஷோர், ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட குக்குகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

குக்காக களமிறங்கிய ஷிவாங்கி
கடந்த சீசன்களில் கோமாளியாக பட்டையை கிளப்பிய ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். இதனிடையே, புகழ், மணிமேகலை உள்ளிட்டவர்கள் கோமாளிகளாக இணைந்துள்ளனர். பாலா இந்த சீசனில் நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. அவர் படங்களில் கமிட்டாகியுள்ளதால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எலிமினேஷன் வாரம்
கடந்த இரு வாரங்களாக ரசிகர்களுக்கு கலக்கல் எபிசோட்களை எந்தவிதமான எலிமினேஷனும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரமாக அமைந்துள்ளது. இதையொட்டி விஜய் டிவி வெளியிட்டிருந்த ப்ரமோவில் ஷெரின், காலயன் மற்றும் இயக்குநர் கிஷோர் இவர்களில் ஒருவர் எலிமினேட் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முதல் எலிமினேஷன்
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இயக்குநர் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக எலிமினேட் ஆகியுள்ளார். இயக்குநர் கிஷோர் நாய் சேகர் என்ற படத்தை இயக்கியவர். கிஷோர் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இனி வரும் வாரங்களில் தொடர் எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











