Mysskin: மனுஷன் பாக்கத்தான் முரடு.. மனசு தங்கம்யா.. மிஷ்கினுக்கு குவியும் பாராட்டு!
சென்னை: விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் பலரை பாடகர்களாக்கி உள்ளது. அனைவருக்கும் பிடித்த இந்த நிகழ்ச்சியின் 11வது சீசன் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதில் டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என இந்த முறை பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம், தமன், இயக்குநர் மிஷ்கின் நடுவராக உள்ளனர். இயக்குநர் மிஷ்கின், இந்த சீசனில் பல திரைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல்களை பாடியுள்ள மிஷ்கின், 'டெவில்' படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். மேடை நிகழ்ச்சிகளில் அனைவரும் ரசிக்கும் படி பேசும் மிஷ்கின் முதன் முறையாக ரியாலிட்டு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதில், போட்டியாளர் திஷாதனாவின் கல்லூரி படிப்பிற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

சூப்பர் சிங்கர் 11 : பல சுற்றுகளாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் 11 நிகழ்ச்சியின் நேற்றை எபிசோடில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், மறைந்த பாடலாசிரியரை நினைவு கூறும் வகையில் அவர்கள் எழுதிய பாடல்களை போட்டியாளர்கள் பாடினார்கள். இதில், பானாகாத்தாடி படத்தில் நா.முத்துகுமார் எழுதிய 'என் நெஞ்சில் ' பாடலை திஷாதனா பாடினார். இலங்கை தமிழரான திஷாதனாவின் பெற்றோர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்து நாமக்கல் அகதிகள் முகாமில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். திஷாதனாவின் தந்தை செண்ட்ரிங் வேலை செய்து மகளை பிசியோதெரபி படிக்க வைத்து வருகிறார்.
மனசு தங்கம்யா: திஷாதனா, பாடி முடித்ததும் இயக்குநர் மிஷ்கின் திஷாதனாவிடம் என்ன படிக்கிற, உன் ஆண்டு கல்லூரி கட்டணம் எவ்வளவு என கேட்டு, இனி மேல் அந்த கல்லூரி கட்டணத்தை தானே கட்டுகிறேன் என்றார். மேலும், திஷாதனாவின் மேற்படிப்பிற்கான செலவுகளையும் நானே கட்டுவேன் என சொல்லி திஷாதனாவையும் அவரின் பெற்றோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதோடு மட்டுமில்லாமல், தனது கடிகாரத்தை கொடுத்து அதை திஷாதனாவின் தந்தையின் கையில் கட்டிவிட சொன்னார். தற்போது இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், இதைப்பார்த்த இணையவாசிகள், மனுஷன் பாக்கத்தான் முரட்டுத்தனமா இருக்காரு, ஆனால் மனசு தங்கம் என மிஷ்கினின் இந்த செயலால் ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











