சூப்பர் சிங்கருக்கு நடுவரான மிஷ்கின்.. இனி ஜட்ஜ்மெண்ட்க்கே தனி ரசிகர்கள்.. கலைகட்டும் சீசன் 11!

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்று சூப்பர் சிங்கர். விஜய் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் மாறலாம், லோகோ மாறலாம், பல நிகழ்ச்சிகள் புதிதாக தொடங்கப்பட்டு, இடையில் காணாமல் கூட போயிருக்கலாம். ஆனால், விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று சூப்பர் சிங்கர். முதலில் சூப்பர் சிங்கர் என மட்டும் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஏகபோக வரவேற்பு என்பது, ஜீனியர், சீனியர் என பிரித்து நிகழ்ச்சிகளை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 இன் போட்டியாளர்களை தேடும் பணியை விஜய் டிவி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11க்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இம்முறை பலரையும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கும் நடுவராக இயக்குநர் மிஷ்கின் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களை கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Director Mysskin One Of The Judge Of Vijay TV Super Singer Senior Season 11 Promo Goes Trending

மண்டல வாரியாக: இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களை சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமையவிருக்கிறது. இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என மண்டல வாரியான பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசை திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின்: நான்கு ஜட்ஜ்கள் ஒவ்வொரு மண்டலத்திற்குப் பொறுப்பேற்கின்றனர். டெல்டா தமிழ் சார்பாக மிஷ்கின் பங்கேற்கிறார். சென்னைத் தமிழ் சார்பாக இசையமைப்பாளர் தமன், கொங்கு தமிழ் சார்பாக அனுராதா ஶ்ரீராம், எங்கும் தமிழ் சார்பாக பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கிறார்.

Director Mysskin One Of The Judge Of Vijay TV Super Singer Senior Season 11 Promo Goes Trending

ஆகஸ்ட், 2: தமிழக மக்களின் மனங்களில் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வந்துள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 11, புதுமையான களம், மண்டல வாரியான போட்டியாளர்கள், புதிய ஜட்ஜ்கள், என ஆரம்பமே களைகட்டுகிறது. சூப்பர் சிங்கர் 11 சீசன் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X