தேர்தல் பரபரப்பிலும்.. இயக்குனர் “ஷங்கர்” மகள் திருமணத்தில் முதலமைச்சர்.. பக்கத்தில் யாரு பாருங்க

சென்னை: சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர்- தருண் கார்த்திகேயன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கும் நிலையில் அந்த திருமண விழாவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன் மனைவியோடு நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூலாக ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Director Shankar daughter Aishwarya wedding M K Stalin has attended

பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஷங்கருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே இயக்குனர் ஷங்கர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டால் போதும் என்று பல நடிகர் நடிகைகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

அதோடு முன்னணி நடிகர்கள் வைத்து பல கோடி செலவில் பல திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஷங்கரின் மூத்த மகளின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ஏற்கனவே ஷங்கரின் மகளுக்கு பிரபல கிரிக்கெட் பிரபலம் ஒருவரோடு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் சில மாதங்களிலேயே அந்த கிரிக்கெட் பிரபலத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷங்கரின் மகள் விவாகரத்து பெற்றுவிட்டார்.

விவாகரத்து பெற்றதும் அடுத்த வேலையாக அவருக்கு இரண்டாவது திருமணத்தையும் பிரம்மாண்டமாக ஷங்கர் செய்து வைத்திருக்கிறார். இதனால் இது பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் தருணுக்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்றது.

அதற்குப் பிறகு பல பிரபலங்களுக்கு ஷங்கர் நேரடியாக திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்திருந்த நிலையில் திருமணத்திற்கு பல பிரபலங்களும் வந்திருக்கின்றனர். அதில் மணமக்களோடு மேடையில் மு. க ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கின்றனர்.

Director Shankar daughter Aishwarya wedding M K Stalin has attended

அவர்களின் பக்கத்தில் நடிகை நளினி இருக்கிறார். மேலும் அந்த மேடையில் ஷங்கர் உடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய மருமகனின் குடும்பத்தினர் என பலர் இருக்கின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X