Sundar C: சங்கமித்ரா படத்தை மீண்டும் தூசிதட்டிய சுந்தர் சி.. எப்ப சூட்டிங் தெரியுமா!

சென்னை: நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி தற்போது தலைநகரம் 2 படத்தின் ரிலீசில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4 படத்தையும் ரிலீசுக்கு தயாராக்கியுள்ளார் சுந்தர் சி. படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார்.

தற்போது தலைநகரம் 2 படத்தின் ப்ரமோஷன்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

Director Sundar C planning for Sangamithra shooting on October or November

மீண்டும் சங்கமித்ரா படத்தை துவங்கும் சுந்தர் சி: கடந்த 2006ம் ஆண்டில் சுந்தர் சி ஹீரோவாக என்ட்ரி கொடுத்த தலைநகரம் படம் வெளியானது. இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இயக்குநர் சுராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் சுந்தர் சிக்கு ஜோதிமயி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் வடிவேலுவின் காமெடி சிறப்பாக அமைந்தது. படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அதே பெயரில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று வடிவேலுவின் ரீஎன்ட்ரி படம் சமீபத்தில் வெளியானது.

இதனிடையே 17 ஆண்டுகள் கழித்து தற்போது தலைநகரம் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை வி இசட் துரை இயக்கியுள்ளார். பாலக் லால்வானி நாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் சுந்தர் சி சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள அவரது கனவுப்படமான சங்கமித்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுந்தர் சி, சங்கமித்ரா தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும் இந்தப் படம் வெளியானால் தன்மீதான ரசிகர்களின் கணிப்பு மாறும் என்றும் கூறியுள்ளார். இந்திய அளவில் மிகவும் பிரம்மாண்டமான படமாக இந்தப் படம் அமையும் என்றும் சர்வதேச தரத்தில் படத்தை உருவாக்கவுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தற்போது பிரம்மாண்டமான செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Director Sundar C planning for Sangamithra shooting on October or November

சுந்தர் சி இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சங்கமித்ரா என்ற வரலாற்றுப்படம் அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ஆனால் தயாரிப்புத்தரப்பில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்தப் படம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் கமிட்டாகியிருந்தனர். இந்நிலையில் தற்போது ஹீரோக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

படத்தில் ஆர்யா, விஷால் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள நிலையில், நாயகியாக முன்னணி ஹீரோயின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் 2 அல்லது மூன்று வருடங்கள் நீடிக்கலாம் என்றும் சுந்தர் சி தெரிவித்துள்ளார். மேலும் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கமித்ரா படம் அதிகமான பொருட்செலவில் உருவாகவுள்ள நிலையில், படம் பாகுபலியின் உருவாக்கத்தை மிஞ்சுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X