சன் டிவியில் மெட்டி ஒலி இயக்குநரின் புதிய சீரியல்... ரசிகர்கள் உற்சாகத்துக்கு இந்தக் காரணம் போதாதா?

சென்னை : மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு, குல தெய்வம் போன்ற தொடர்களை சன் டிவிக்காக கொடுத்தவர் இயக்குநர் திருமுருகன்.

இவர் இந்த சீரியல்களை இயக்கியதுடன் தன்னுடைய திரு பிக்சர்ஸ் சார்பில் ஒரு சிலவற்றை தயாரிக்கவும் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சன் டிவிக்காக புதிய தொடரை கொடுக்க உள்ளார் திருமுருகன்.

மெட்டி ஒலி தொடர்

மெட்டி ஒலி தொடர்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. புதிய புதிய இயக்குநர்களின் படைப்புகளை ரசிகர்கள் ரசித்து வந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களை கட்டிப் போட்ட தொடர் என்றால் அது இயக்குநர் திருமுருகனின் மெட்டி ஒலி தொடர் தான்.

5 மகள்களை பெற்ற அப்பா

5 மகள்களை பெற்ற அப்பா

ஐந்து பெண்களை பெற்றால், அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழியை பொய்யாக்கி, தன்னுடைய 5 மகள்களை இளவரசிகளாக வளர்த்துவரும் ஒரு அப்பா, அவர்களை திருமணம் செய்துக் கொடுத்தபின்பு சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் வெளியானது.

கோபி கேரக்டரில் திருமுருகன்

கோபி கேரக்டரில் திருமுருகன்

பரபரப்பான பல திருப்பங்களுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பானது. இந்தப் பெண்களின் வாழ்க்கையில் அவரது கணவர், சொந்தங்கள் என அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தத் தொடர் மையப்படுத்தியது. மேலும் திருமுருகனும் கோபி என்ற கேரக்டரில் இந்தத் தொடரில் சிறப்பான கணவராக நடித்திருப்பார்.

அடுத்தடுத்த தொடர்கள்

அடுத்தடுத்த தொடர்கள்

இந்தத் தொடர் சிறப்பான கவனத்தை பெற்ற நிலையில், அடுத்தடுத்து நாதஸ்வரம், கல்யாண வீடு, குல தெய்வம் என அடுத்தடுத்த தொடர்களை இயக்கினார். திரு பிக்சர்ஸ் என்ற பெயரில் சில சீரியல்களை தயாரிக்கவும் செய்தார். சீரியல்களில் இவருக்கு கிடைத்த புகழ், சினிமா இயக்கவும் வாய்ப்பு பெற்றுத் தந்தது.

எம்டன் மகன் படம்

எம்டன் மகன் படம்

நடிகர் பரத்தை வைத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டும் என இரண்டு படங்களை இயக்கினார். இதில் நாசர், வடிவேலு மற்றும் சரண்யா இணைந்து நடித்திருந்த எம்டன் மகன் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்தப் படத்தின் காமெடி எவர்கிரீன் ரகம்.

மீண்டும் புதிய தொடர்

மீண்டும் புதிய தொடர்

இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது திருமுருகன் மீண்டும் சன் டிவிக்காக சீரியலை இயக்க களமிறங்கியுள்ளார். இதில் நடிக்க நடிகர், நடிகைகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் அவரை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X