Vignesh Shivan: சின்னத்திரைக்கு வரும் விக்னேஷ் சிவன்.. என்ன இப்படி இறங்கிட்டாரு?
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழில் போடா போடி படம் மூலம் தன்னுடைய அறிமுகத்தை செய்திருந்தார். இந்தப் படம் கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியபோதுதான் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலில் விழுந்தனர். இவர்களது வாழ்க்கை தற்போது திருமணம், குழந்தைகள் என்று சிறப்பாக மாறியுள்ளது.

சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விக்னேஷ் சிவன்: இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான போடா போடி என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. சிம்பு இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார். வரலட்சுமிக்கும் இதுதான் அறிமுகப்படம். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்திருந்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கியிருந்தார்.
காமெடி தூக்கலாக இருந்த நானும் ரவுடிதான் படம் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. சிறப்பான வாழ்க்கையையும் கொடுத்தது. இந்தப் படத்தில் இணைந்து நடித்தபோதுதான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையில் காதல் மலர்ந்தது. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் காதலித்துவந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம், இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த திருமணத்தை தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் இவர்கள் பெற்றோர் ஆகினர். இந்த விவகாரம் அதிகமான விமர்சனங்களை எழுப்பியது. ஆனால் அவை அனைத்தையும் பொறுமையாக சமாளித்தனர். தற்போது தங்களுடைய கேரியரில் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். குழந்தைகளிடமும்தான். எங்கே சென்றாலும் இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் இணைந்து செல்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அஜித்துடனான ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அந்தப் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது அடுத்தப்படத்திற்கான வேலைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது சின்னத்திரைப் பக்கம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீ தமிழ் சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சிறப்பான வரவேற்பை பெற்ற காபி வித் டிடி நிகழ்ச்சி போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் கோலிவுட்டில் மிகவும் சிறப்பான ஜோடியாக பார்க்கப்படுகின்றனர். இவர்களின் ஒவ்வொரு மூவையும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். அடுத்ததாக படம் இயக்குவதில் கவனம் செலுத்திவரும் விக்னேஷ் சிவன், தற்போது சின்னத்திரை பக்கமும் வந்துள்ளதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் தற்போது வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனைவரும் சிறப்பான கவனத்தை செய்து வரும்நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த மூவ், சிறப்பாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications