"புலி"களின் கம்பீரத்தை நேசிக்கும் ஸ்ருதிஹாசன்

By Mayura Akilan

புலிகள் கம்பீரமானவை... அதன் ஒவ்வொரு செயல்பாடும் எனக்கு பிடித்தமானது என்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அது புலிகள் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி.

இந்தியாவின் தேசிய விலங்கான புலியை கொண்டாடும் விதமாக ஒரு மாத காலத்திற்கு 'வேர் டைகர்ஸ் ரூல்ஸ்' என்ற நிகழ்ச்சி டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 1 முதல் இம்மாதம் முழுவதும் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. புலிகளின் நடவடிக்கைகள், வேட்டைத் திறன்கள், மற்றும் அவை அழியாது காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் என பல்வேறு அம்சங்களை காட்சிப்படுத்துகிறது இந்நிகழ்ச்சி.

ஸ்ருதிஹாசன் ஆர்வம்

ஸ்ருதிஹாசன் ஆர்வம்

வேர் டைகர் ரூல்ஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹாசன் புலிகள் பற்றிய தனது அக்கறையை, ஆர்வத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

புலிகள் வாழ்க்கை முறை

புலிகள் வாழ்க்கை முறை

புலிகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம். புலியின் வாழ்க்கை முறை. உயரின சுழற்சிக்கு அவைகள் எவ்வாறு உதவி புரிகின்றன என்பது பற்றி விளக்கும் ஸ்ருதி, காட்டு விலங்குகள் பாதுகாப்பு பற்றியும் பேசுகிறார்.

சம்பளம் வாங்காத ஸ்ருதி

சம்பளம் வாங்காத ஸ்ருதி

இதில் புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார் இயற்கையிலேயே ஸ்ருதி, விலங்குகள் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர் என்பதால் எந்த சன்மானமும் பெற்றுக் கொள்ளாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

வேட்டையாடும் புலிகள்

வேட்டையாடும் புலிகள்

புலிகள் நடந்துகொள்ளும் விதம், அவற்றின் வேட்டைத் திறன்கள், குடும்ப வாழ்க்கை மற்றும் அவை மனிதர்களால் வேட்டையாடப்படும் அவலம் குறித்து இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு விளக்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X