Bigg Boss: டைட்டில் வின்னர் அவங்கதான்.. சிம்பாலிக்கா சொன்ன பிக்பாஸ்.. ரன்னர் யாரு தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஜனவரி 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. செலிபிரேஷன் வாரங்கள் எல்லாம் முடிந்து நான்கு இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்த சீசனில் அரோரா, திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சபரி என நான்கு பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இதில் அரோரா மட்டும் டிக்கெட் டூ ஃபினாலேவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்.
இந்த சீசனில் யார் டைட்டில் வின்னராக வாய்ப்பு அதிகம், யார் வெற்றி பெறவேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள் என்ற கருத்துக்கணிப்புகள், ஆசைகள், எண்ணங்கள் என பலவும் இந்த சீசனை சுற்றி ஓடிக் கொண்டே உள்ளது.

ரசிகர்கள் கண்டுபிடிப்பு: அப்படி இருக்கையில் இன்றைய அதாவது ஜனவரி 17ஆம் தேதி எபிசோடைப் பார்க்கும்போது அரோரா தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் இவ்வாறு கூறுவதற்கு காரணமாக, பிக்பாஸின் ஒரு செயல் தான் என்கிறார்கள். அதாவது கடந்த கால சீசன்களில், டாப் 4 அல்லது டாப் 5 போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் பயண வீடியோவானது அவர்கள் வீட்டிற்குள் இருக்கும்போதே ஒளிபரப்பப்படும். அதில் டைட்டில் வின்னராக யாருக்கு வாய்ப்பு உள்ளதோ அவர்களின் வீடியோ கடைசியாக ஒளிபரப்பப்படும். அந்த வகையில் அரோராவின் பயண வீடியோ இறுதியாகத்தான் ஒளிபரப்பட்டது.

டைட்டில் வின்னர்: ஆனால் அரோரா மூன்றாவது ரன்னராக அதாவது டாப் 4வது இடத்தில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் எனவும், திவ்யா கணேஷ் தான் இந்த சீசனின் வின்னர் என்றும் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். திவ்யா கணேஷ் டைட்டிலுக்கு தகுதியானவர் என்றும், கார் டாஸ்க்கில் பார்வதி மற்றும் கமருதீனை கடுமையாகவும் தைரியமாகவும் எதிர்த்தவர்களில் திவ்யாவும் ஒருவர் என்றும், பல நேரங்களில் அநியாயத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்ததால் திவ்யா தகுதியானவர் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் விக்கல்ஸ் விக்ரம் அல்லது சபரி என இவர்கள் இருவரில் ஒருவர் ரன்னராக வருவார்கள் என்றும் அதில் விக்கல்ஸ் விக்ரமிற்கு தான் ரன்னராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். ரசிகர்களின் இந்த பேச்சுக்கள் பிக்பாஸ் இறுதி எபிசோட் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











