சேரில் இப்படி உட்கார்ந்து.. அப்படிப் பார்த்தா.. நாங்க என்னாவது.. ரசிகர்கள் கிறக்கம்!
சென்னை: காலை விரித்தபடி சேரில் கன்னாபின்னாவென போஸ் கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ சூட் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
சீரியலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் திவ்யா கணேஷ் இளம் ரசிகர்களின் மத்தியில் நன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறார்

திவ்யா கணேஷ்
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ரொம்பவே ஆக்டிவாக இருந்ததால் இவருக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகிறது. இவர் இந்த சீரியலில் இனியனை காதலித்து ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவில் ரொம்பவே கஷ்டப்பட்டு திருமணம் முடித்து இருந்தாலும் தற்போது இந்த வீட்டிற்குள் இவர் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளும் அனைத்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது .

வக்கீலுக்குப் படிக்க ஆசை
அதனால் இவருடைய கேரக்டர் ரசிகர்களின் மனதில் நன்றாகவே ஒட்டிக்கொண்டது. இவருடைய சொந்த ஊர் ராமநாதபுரத்தில் பிறந்து இருந்தாலும் இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதற்காக இவரும் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் வந்த இடத்தில் இவருக்கு புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதில் நடித்திருக்கிறார்.

விஜேவாக அசத்தல்
அதற்கு பிறகு இவருக்கு விஜே வாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதிலும் கலக்கியிருக்கிறார். ஆனால் வந்த வேலையை மறந்து நடிப்பில் இவர் காலடி எடுத்து வைத்ததும் இவரது தந்தை முதலில் ஒத்துக் கொள்ளவில்லையாம். அதற்கு பிறகு இவர்தான் கஷ்டப்பட்டு கன்வஸ் பண்ணி அவருடைய மனத்தை மாற்றி இருக்கிறார் .அதற்குப் பிறகு அவருடைய தந்தையும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவே தற்போது பல சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

லட்சுமி வந்தாச்சு
சன் டிவி ,விஜய் டிவி ,ஜீ தமிழ் என பல டிவி சேனல்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல்முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்து அதற்கு பிறகு சுமங்கலி, கேளடி கண்மணி என்னும் சீரியலிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுமங்கலி என்ற சீரியலில் இவர் செம்பரத்தி கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தார்.

ரோல் மாடல்
தற்போது இவர் பாக்கிய லட்சுமி என்னும் சீரியலில் விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்தாலும் காதல் செய்யும் இளம் காதலர்களுக்கு இவர் ரோல்மாடலாக மாறிவிட்டார். இவர் சுமங்கலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது நடிகரும் டைரக்டருமான ஆர்கே சுரேஷ் என்பவரை காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் வெளியாகி இருந்தது .அந்த நேரத்தில்தான் ஆர்கே சுரேஷ் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் இது அரேஞ்ச் மேரேஜ் தான் என ஒரு பிரஸ்மீட்டில் சொல்லியிருந்தார் .

ஆர்.கே.சுரேஷுடன் திருமண பேச்சு
ஆனால் கொஞ்ச நாளைக்கு பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர் பிரிந்து விட்டார் .ஆனால் தற்போது ஆர்கே சுரேஷ் நடிப்பில் பிஸியாக இருந்து வருவது போலவே திவ்யாவும் சீரியலில் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல சினிமா பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சீரியலில் நடிப்பு போக இவர் மாடலிங்கில் கலக்கி கொண்டிருப்பதால் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார்.

செம ஹோம்லி
அதிலும் இவர் சீரியலில் ஹோம்லியாக பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் .அந்த அளவிற்கு வெரி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கி இருக்கிறார் .அதுவும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அந்த சேர்ருக்கு கிடைத்த பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே என பலர் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











