»   »  தீபாவளிக்கு களமிறங்கும் டிவி சேனல்கள்: நீ மாஸ்னா... நான் பக்கா மாஸ்...

தீபாவளிக்கு களமிறங்கும் டிவி சேனல்கள்: நீ மாஸ்னா... நான் பக்கா மாஸ்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில், உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மாரி, காஞ்சனா, ருத்ரம்மாதேவி உள்ளிட்ட பல புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

தீபாவளி பண்டிகைன்னு சொன்னாலே... புது துணிகள்... பட்டாசு... பலகாரம் மட்டுமல்ல டிவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் பாக்குறதும் இன்னைக்கு முக்கிய விசயமா இருக்கு. இதை யாராலும் மறுக்க முடியாது.


காலையில எண்ணெய் தேய்ச்சு குளிச்சுட்டு... சாமிகும்பிட்டு புது டிரஸ் மணக்க மணக்க போட்டுக்கிட்டு... அம்மா சுட்ட வடையோ... முறுக்கையோ கடிச்சிக்கிட்டே மத்தாப்பு பத்தவைக்கிறது தனி சுகம்.


நாம வெடிக்கிற வெடி பக்கத்து வீட்டை அதிரவைக்கணும்ல என்று போட்டி போட்டு பத்தவைப்பார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்க டிவி சேனல்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் நடிகர், நடிகைகளின் பேட்டிகள் என கலக்கலாக ஒளிபரப்புவதை பார்ப்பது தனி சுகம்.


விஜய் டிவியின் செஞ்சிருவேன்

விஜய் டிவியின் செஞ்சிருவேன்

தனுஷ் நடித்த மாரி படத்தை கடந்த 15 நாட்களாகவே முன்னோட்டம் போடும் விஜய் டிவி செஞ்சிருவேன் என்று மிரட்டி வருகிறது.


விஜய் டிவியின் விஎஸ்ஒபி

விஜய் டிவியின் விஎஸ்ஒபி

உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ‘சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற திரைப்படத்தையும் விஜய் டிவி தீபாவளி தினத்தன்று ஒளிபரப்புகிறது.


நான் பக்கா மாஸ்

நான் பக்கா மாஸ்

சன் டிவிவோ, நீ மாஸ்னா நான் பக்கா மாஸ் என்று கூறும் சன்டிவியோ காஞ்சனா 2 படத்தை தீபாவளிக்கு ஒளிபரப்புகிறது.
சிங்கப்பூரில் பட்டிமன்றம்

சிங்கப்பூரில் பட்டிமன்றம்

சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி ஆகியோர் சிங்கப்பூரில் போய் பட்டிமன்றம் நடத்தியுள்ளனர். இந்த பட்டிமன்றம் சன்டிவியில் திபாவளியன்று ஒளிபரப்பாகிறது. இதற்கும் முன்னோட்டம் போடுகின்றனர்.


ருத்ரம்மா தேவி

ருத்ரம்மா தேவி

மா டிவியில் அனுஷ்கா நடித்த ருத்ரம்மா தேவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதுவும் ரசிகர்களிடையே நிச்சயம் ஒரு போட்டியை உருவாக்கும்.
ஜெயாடிவியில் என்ன படம்?

ஜெயாடிவியில் என்ன படம்?

கலைஞர் டிவி, ஜெயாடிவி, பாலிமர் டிவி, ராஜ் டிவியில் இனி என்னென்ன படம் போடப்போகிறார்களோ? யார் யாருக்கு இடையே தீபாவளிக்கு முட்டல் மோதல் நடக்கப் போகுதோ தெரியலையே.


English summary
Arya's latest Vasuvum Saravananum Onna Padichavanga is all set to get a Diwali premiere. The film starring Arya, Santhanam and Tamanaaah is directed by Rajesh and is produced by Prasad V Potluri's PVP Cinema in association with Arya's production company, The Show People.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil