Ola கார்ல இருந்து Own கார் வாங்கிட்டேன்.. எமோஷனலான டிஜே பிளாக்.. ஆரத்தி எடுத்த பிக் பாஸ் பிரியங்கா!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான டிஜே பிளாக் புதிதாக கார் ஒன்றை வாங்கி உள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் டிவிக்கு சென்றாலே ஸ்டார் ஆகி விடலாம் என ஏகப்பட்ட திறமைசாலிகள் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்குள் அடியெடுத்து வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சமீபத்தில் பெரிதும் பேசப்பட்டு வருபவர் டிஜே பிளாக். சமீபத்தில், சூப்பர் சிங்கர் பாடகி பூஜா மற்றும் அவரது குடும்பத்தினர் ஷோவிலேயே டிஜே பிளக்கை வச்சு செய்தது வேறலெவலில் டிரெண்டானது.

அடுத்த செலிபிரிட்டி

அடுத்த செலிபிரிட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமே தனியாக ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சிவாங்கி, புகழ், மணிமேகலை, பிரியங்கா, ஜாக்குலின், மாகாபா ஆனந்த் என ஒவ்வொருவரையும் பிரபலங்களாகவே ரசிகர்கள் மாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் டிஜே பிளாக். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சரியான நேரத்தில் டிஜே மியூசிக்கை போடுவது, வசனங்களை போடுவது என வெயிட்டு காட்டி வருகிறார்.

வச்சு செய்த பூஜா குடும்பத்தினர்

வச்சு செய்த பூஜா குடும்பத்தினர்

சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வரும் நிலையில், இதில், பூஜா எனும் இளம் பெண் பாட்டுப் பாடி வருகிறார். அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக காதல் பாடல்களையும், ரொமான்டிக் வசனங்களையும் டிஜே பிளாக் போட்டு வருவது ஏன் என சமீபத்திய ஷோவில் பூஜாவின் குடும்பத்தினர் டிஜே பிளாக்கை விளாசி எடுத்து விட்டனர்.

இது பிராங்க் பிளாக்

இது பிராங்க் பிளாக்

அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லைங்க, பூஜா எனக்கு தங்கச்சி மாதிரி என்கிற ரேன்ச்ஜுக்கு டிஜே பிளாக் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க, இது பிராங்க் பிளாக் என அவரை ஒரு காமெடி பீஸாகவே மாற்றிய ஷோ டிஆர்பியில் பற்றிக் கொண்டு டிரெண்டானது. இந்நிலையில், டிஜே பிளாக்கின் எமோஷனல் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

சொந்தமாக கார்

சொந்தமாக கார்

விஜய் டிவி பிரபலங்கள் பலரும் லோன் போட்டாவது ஒரு புதிய கார் வாங்கி அதில் தான் வலம் வருகின்றனர். இந்நிலையில், புதிதாக கார் ஒன்றை வாங்கி உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார் டிஜே பிளாக்.

ஆரத்தி எடுத்த பிரியங்கா

ஆரத்தி எடுத்த பிரியங்கா

பிக் பாஸ் பிரபலமான விஜய் டிவி பிரியங்கா மற்றும் விஜய் டிவியின் சூப்பர் தொகுப்பாளரனா மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து டிஜே பிளாக் புதிதாக கார் வாங்கிய நிலையில், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ காட்சி ரசிகர்களை அட போட வைத்துள்ளது.

ஓலா டு ஓன்

ஓலா காரில் இருந்து இன்னைக்கு ஓன் காரே வாங்கும் அளவுக்கு உயர்வதற்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு என ரொம்பவே நெகிழ்ச்சியுடன் விஜய் டிவிக்கு ஸ்பெஷல் நன்றி எல்லாம் சொல்லி டிஜே பிளாக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கார் உடன் பதிவிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X