ஆத்தாடி.. முத்துசெல்விக்கு இம்புட்டு தைரியமா? வாயாடியா இருக்காளே...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வி மீது பழி விழுந்து,அவளை வீட்டை விட்டு வெளியில போக சொல்லிடறாங்க விஜயலட்சுமி அம்மா.
காரணம்னு பார்த்தா...சின்னவருக்கு ரெண்டு கன்னத்துலயும் பச்சக் பச்சக்னு முத்தம் குடுத்ததுதான்.
என்ன ஒரு அருவெறுப்பான காரியத்தை செய்திருக்கடி... நீ எல்லாம் ஒரு பொண்ணான்னு கேட்டு அவளை அடிச்சுட்டுத்தான் வீட்டை விட்டு வெளியில் போக சொல்லறாங்க...

திட்டறார் அப்பா
அவுட் ஹவுஸுக்கு வந்தா அப்பா முத்துசெல்வியை மானம் போக திட்டறார்.இந்த சின்னது ஒண்ணு இருக்கே...அது சொல்லுது..ஐயன்தான் திட்டறார்ல சின்னவருதான் முத்தம் குடுக்க சொன்னார்னு சொல்லிடுக்கான்னு சொல்றா.வேணாம் தங்கம் சின்னவரை மாட்டிவிட்டு மாதிரி ஆயிரும்னு சொல்றா.

லெட்டருடன் போறா
ஒரு கட்டத்துல அப்பா திட்டுவதை தாங்க முடியாம முத்துச்செல்வி, சின்னவரு குடுத்த லெட்டரை எடுத்துக்கிட்டு விஜயலட்சுமி அம்மாவை பார்க்கப் போறா. ஏணி வச்சு ஏறி மாடிப்படி வழியா வர்றா.

வாசற்படி
உன்னைத்தான் எங்க வீட்டு வாசற்படி மிதிக்க கூடாதுன்னு சொல்லிட்டேன்ல எதுக்குடி வந்தேன்னு கேட்கறாங்க கோவமா. அதுக்குதான்மா ஏணி வச்சு ஏறி மாடிப்படி வழியா வந்தேன்னு சொல்றா என்னவோ ஜோக் மாதிரி.

நல்லவளா நீ?
என்னடி நல்லவ மாதிரி பேசறேன்னு கேட்க... சொன்னாலும் சொல்லாட்டியும் நான் நல்லவதான்மா... சின்னவரு சொல்லித்தான் நான் அப்படி செய்தேன்னு வாயாடித்தனமா பேசறா. என் தம்பியைப் பத்தி எனக்கு நல்ல தெரியும்னு அந்தம்மா சொல்ல..இவளும் கூட கூட பேசறா..இந்த இடத்துல விஜயலட்சுமி அம்மா மேல பார்க்கறவங்களுக்கு இருக்கும் மதிப்பு குறைஞ்சுதான் போகுது.

தெரியாதா இயக்குநருக்கு?
ஒரு சீன் வச்சா யார் யாரு எந்த கேரக்டர் பிளே பண்றங்க..அதை கடைசி வரைக்குமம் அப்படியே கொண்டு போகணும்னு இயக்குநருக்கு தெரியாதா? இப்பொழுது முத்துச்செல்வி வாயாடிபோலவும், எடுத்தெறிஞ்சு பேசுவது போலவும் கேரக்டர் அமைஞ்சுருச்சே...அவ கேரக்டர் பார்த்தாலே வெறுப்பா இருக்கற மாதிரி இருக்கு.


Click it and Unblock the Notifications











