பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா.. சம்பளம் எத்தனை லட்சம் தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 36வது நாளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு போட்டியாளர்கள் யாரையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பவில்லை. இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுனிதா வெளியேறியுள்ளார். அவர் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏழு சீசன்களை கமல் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகிறார். யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசாதது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து இருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

bigg boss season 8 sunitha salary

பிக் பாஸ் சீசன் 8: பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த வாரம் வைல்டு கார்டு என்டரியாக சிவகுமார், மஞ்சரி, ராணவ், ரியா, வர்ஷினி வெங்கட், ரயான் 6 போட்யாளர்கள் வந்த நிலையில், இந்தமுறை ஓபனாக நாமினேஷன் நடைபெற்றது. இதில் அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகிய 11 பேரும் நாமினேட் செய்யப்பட்டனர். அந்த வாரம் 6 பேர் வைல்டு கார்டில் உள்ளே வந்திருப்பதால், இந்த வாரம் அவர்களை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் அறிவித்து விட்டார். எனவே அவர்கள் 6 பேரும் லிஸ்டில் இருந்து தப்பித்து விட்டனர்.

நேற்றைய எபிசோட்: இந்தநிலையில் வாக்குகள் அடிப்படையில் சாச்சனா இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சுனிதா, ஆர்ஜே அனந்தி, சாச்சனா மூவரில் ஒருவர் எலிமினேட் ஆகலாம் அதிக வாய்ப்பு இருந்தது. நேற்றைய எபிசோடில், கடந்த வாரம் கடந்த பஞ்சாயத்து குறித்து பேசினார். அப்போது, சவுந்தர்யாவிற்கும் தீபக்கிற்கும் நடந்த சண்டை குறித்து பேசினார். மேலும், கதை சொல்லும் டாஸ் குறித்து பேசிய அவர், ஜாக்குலின் கதை தன்னை பாதித்ததாக கூறினார்.

வெளியேறினார்: இதையடுத்து நாமினேஷனில் இருந்த ஒவ்வொரு போட்டியாளர்களையும் காப்பாற்றினார்.கடைசியில் ஆர்ஜே ஆனந்தி மற்றும் சுனிதா இருக்க குறைந்த வாக்குகளை பெற்று சுனிதா வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் நண்பர்களா இருந்த அக்ஷிதா, சுனிதா வெளியேறியதால் கண்ணீர் சிந்தினார். பிக் பாஸ் வீட்டில் சுனிதா சிறப்பாக விளையாடிய போதும், சுனிதா எப்போதும் ஏதாவது ஒன்று பேசிக்கொண்டே இருந்ததால், மக்கள் அவருக்கு ஓட்டு அளிக்காமல் இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

சுனிதாவின் சம்பளம்: இதையடுத்து தற்போது சுனிதா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சுனிதாவிற்கு ஒரு நாளுக்கு ரூ 20 முதல் 25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,சுனிதா 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு 7 முதல் 8 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. சுனிதா கோகோய் 2010ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆனார். அதன் பின் சீசன் 8 மற்றும் 9 கலந்து கொண்டு இரண்டிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் சுனிதா 3 மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X