குக் வித் கோமாளி சீசன் 5.. மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மக்களிடை யே நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உள்ளது. 2019ஆம் ஆண்டு தொ டங்கிய இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடை பெற்று வருகிறது. இந்த சீசனில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை வெளியேறிய நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் என்ன சம்பளம் வாங்கினார் என்று பார்க்கலாம்.

இதுவரை நான் சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், ஐந்தாவது சீசன் நடுவர்கள், கோமாளிகள், போட்டியாளர்கள் என சின்ன சின்ன மாற்றங்களுடன் தொடங்கிய 5வது சீசனின் இந்த வாரம் ஷோவின் செமி பைனல் ஒளிபரப்பப்பட்டது. அதில் முதல் ஆளாக நடிகை சுஜிதா பைனலுக்கு முன்னேறி இருந்தார். 5வது சீசனின் பைனல் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இல் பிரியங்கா டைட்டிலை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

manimegalai salary priyanka

இதில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மணிமேகலை 2 தினங்களுக்கு முன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். எல்லாவற்றிலும் மேலானது சுயமரியாதை முக்கியம் என்றும் இந்த சீசனில் குக்காக வந்த ஒரு பெண் அவர் வேலையை மறந்து ஆங்கர் போல் செயல்படுகிறார். என் வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் அவர் குறுக்கிடுகிறார் என்றும் மணிமேகலை கூறியிருந்தார். மணிமேகலை குறிப்பிடுவது தொகுப்பாளரும், குக் வித் கோமாளியில் குக்காக இருக்கும் பிரியங்காவை தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் சிலர் மணிமேகலைக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இப்படி ஒரு இவர்கள் இருவரின் பஞ்சாயத்து ஒருபக்கம் சென்று கொண்டு இருக்க, இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கு ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்க, ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ப்ரியங்காவிற்கு எபிசோடுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பிரியங்காவை விட மணிமேகலை பாதி 40 சதவீதம் குறைவான சம்பளத்தை வாங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X