நல்லா தூக்குமா தெரியணும்.. பவித்ராவை பார்த்து தீபக் சொன்ன வார்த்தை.. என்னங்க நடக்குது!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பிக் பாஸ் வீட்டில் ஆனந்தி, அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்லின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சவுந்தர்யா, தர்ஷிகா, விஷால், ரியா ஆகியோர் இருக்கின்றனர்.
இதில், முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேறினார். அதைத்தொடர்ந்து அர்ணவ், தர்ஷா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் நாமினேஷனில் சிக்கி வெளியேறினார். இதில் கடந்த வாரம், பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில் வழக்கம் மேல சண்டையை மூட்டிவிட்டு, டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற நினைத்தார். ஆனால்,கடந்த வாரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்தவிதமான சுவாரசியமும் இல்லை.

பிக்பாஸ் சீசன் 8: இதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாவது எதாவது சுவாரசியமாக இருக்கும் என்று பார்த்தால், அதிலும் விஜய் சேதுபதி பெரியதாக எதையும் செய்யவில்லை. இதையடுத்து, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகளை பெற்ற ஷிவக்குமார் வெறியேறினார். சாச்சனா வெளியாக இருந்த நிலையில், அவர் தொடர்ந்து வீட்டில் கண்டண்ட் கொடுத்து வருவதால் அவர் இந்த வாரம் தப்பித்துவிட்டார்.
என்னங்க நடக்குது: இந்நிலையில், தற்போது இணையத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் எதற்காகவோ ஓட்டெடுப்பு நடக்கிறது. அதில் அனைவரும் கைகளை தூக்குகின்றனர். ஆனால் பவித்ரா மட்டும், கையை சரியாக தூக்காமல், அரைகுறையாக கையை தூக்கியதால் கடுப்பான தீபக், கையை ஒழுங்காக தூக்கு என்றார்.
ஆனால் பவித்ரா, நான் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருக்கிறேன் அதனால் நான் கையை சரியாக தூக்கவில்லை. இதக்கூடவா புரிஞ்சிக்க மாட்டீங்க.. இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார். இதை அடுத்து, ரஞ்சித் மற்றும் சத்யா ஆகியோர் ஓகே ஓகே பரவா இல்லை என்று கூறிவிட்டனர்.ஆனால், தீபக் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் என்னங்க நடக்குது அங்கே என்று கமெண்ட் பாக்சில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











