எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பார்கவி யாருனு தெரியுமா? அவரின் சம்பள விவரம்!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதன் முதல் பகுதி முடிவடைந்ததை தொடர்ந்து. கடந்த டிசம்பர் மாதம் முதல் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் சீரியல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில், வேலன் ராமமூர்த்தி, சபரி பிரசாந்த், கமலேஷ், விம் ராமன், சத்யப்பிரியா, பார்வதி வெங்கட்டராமன், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தர்ஷன், தனது அப்பா குணசேகரன் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடுகிறான். தர்ஷனை காதலித்த பார்கவையும் பிரச்சனை வேண்டாம் என்று குடும்பத்தோடு அங்கிருந்து சென்று கொடைக்கானலில் இருக்க, வீட்டை விட்டு ஓடிவந்த தர்ஷனும் கொடைக்கானலுக்கு வருகிறார். இதனால், பார்கவியின் குடும்பம் மீண்டும் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது.

Ethirneechal Thodargiradhu Raji shree
Photo Credit:
.
எதிர்நீச்சல் தொடர்கிறது: தர்ஷனை எங்கே தேடியும் கிடைக்காததால், திட்டம் போடும் குணசேகரன் எப்படியாவது தர்ஷனை வர வைக்க வேண்டும் என ஈஸ்வரியிடம் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து, நல்லவன் போல நடித்து தர்ஷனை வீட்டிற்கு வர வைக்கிறான். கூடவே பார்கவியையும், பார்கவியின் அப்பாவையை அழைத்து வர சொல்கிறான். கடையில், குணசேகரன் போட்ட திட்டத்தால், தர்ஷன் வீட்டிற்கு வர, அவன் வந்ததும் வராததுமே அடி ஆட்களைவைத்து அவனை தர்ஷனை அடிகிறார். அதே போல, பார்கவியையும் அவளின் அப்பாவையும் கொல்ல அடியாட்கள் அவரின் கழுத்தை பிடித்து நெறிக்கின்றனர். இதில், பார்கவியின் அப்பா உயிரிழந்து விடுகிறார். இப்படித்தான் இந்த சீரியல் பரபரப்பாக அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்புடன் சென்று கொண்டு இருக்கிறது

யார் இந்த பார்கவி: இப்படி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பார்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ராஜி ஸ்ரீ. மார்ச் மாதம் 20ந் தேதி சென்னையில் பிறந்த ராஜி ஸ்ரீ, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்திருக்கிறார். மாடலிங்கின் மீது ஆர்வம் இருந்ததால் மாடலிங் துறையை தேர்வு செய்த இவர், பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அப்போது தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு ஆடிஷன் நடந்துள்ளது. அதில், ஏராளமானோர் கலந்து கொண்ட போதும், ராஜி ஸ்ரீக்கு தான் பார்கவி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இது இவரின் முதல் சீரியலாக இருந்த போதும், நல்ல மேம்பட்ட நடிகை போல சிறப்பாக நடித்து வருகிறார். இவருக்கு இந்த சீரியலில் நடிக்க தினமும் 5 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X