பொண்டாட்டிக்கு ஸ்லோ பாய்சன்.. கொடூர வில்லன்.. அழகே அழகு சீரியல் நடிகர் தங்கராஜ் யார் தெரியுமா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் தங்கராஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் குறிஞ்சிநாதன். இந்த சீரியலில் அன்ஷிதா, நட்சத்திரா, பிரேம் ஜேக்கப், குணா ஆகியோர் முக்கிய ரோலில் நடத்து வருகின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி வரும் குறிஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் குறிஞ்சிநாதன்: நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞரான குறிஞ்சிநாதன் சின்னப்பாப்பா பெரிய பாப்பா, அபியும் நானும், சித்தி 2, மரகத வீணை, பட்ஜெட் குடும்பம் போன்ற சீரியலில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் மாமனார் குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு வில்லனாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் வரவேற்பை பெற்று வரும் போதும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஆட்டிப்படைப்பதால் பலரும் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

vijay Tv serial actor
Photo Credit:

அழகே அழகு சீரியல்: இதுகுறித்து பேசிய அவர், அழகே அழகு சீரியலில் கூட கொஞ்சம் தான் வில்லத்தனத்தை காட்டி இருந்தேன். ஆனால், மரகத வீணை சீரியலில், மனைவியின் சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் கட்டுன மனைவிக்கே ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்ல நினைக்கும் கொடூரமான கணவனாக நடித்து இருந்தேன். அந்த சீரியலை பார்த்துவிட்டு, என் மனைவி கிண்டலாக எனக்கும் அப்படி செய்துவிடாதீர்கள் என்றார். நான் சீரியலில் மட்டும் மில்லை நிஜத்திலும் கோவக்காரன் தான், ஆனால், காரணத்தோடு தான் என் கோவம் இருக்கும் எல்லாத்துக்கும் கோவப்பட மாட்டேன்.

vijay Tv serial actor
Photo Credit:

நல்ல வரவேற்பு: அழகே அழகு சீரியல் எனக்கு நல்ல பெயரை கொடுத்து இருக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடை பார்த்துவிட்டு பலர் இன்ஸ்டாகிராமில் என்னை திட்டி வருகின்றனர் என்றார். முதலில் இந்த சீரியலில், பாக்யராஜ் ரோலில் நடிக்கத்தான் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், இயக்குநர் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார். அவர் சொன்னது போலவே தங்கராஜ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாக நடிகர் குறிஞ்சிநாதன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X