CWC6: ஆரம்பமே அசத்தல்.. அப்போ சண்டை கன்ஃபாம்.. குக்காக களமிறங்கிய பிரபலங்கள் யார் தெரியுமா?
சென்னை: அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனுக்கான 10 போட்டியாளர்களும் ஜென் கோல்ட் மற்றும் ஜென் போல்டு என அறிமுகப்படுத்தினர். இந்த முறை டிவி நிகழ்ச்சிகளுக்கு தொடர்பில்லாத போட்டியாளர்கள் சிலர் களமிறங்கி உள்ளனர். இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை போட்டுக்கொண்ட சௌந்தர்யா, சுனிதா கோமாளியாக களமிறங்கி உள்ளதால், நிச்சயம் சண்டை கன்ஃபாம் என பார்வையாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது. பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதில், நடுவர் விதவிதமான டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுப்பார், அதை செய்ய விடாமல் தடுப்பதற்கு என்றே சில கோமாளிகளையும் கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் சமையலை விட, கோமாளித்தனம் தான் அதிகமாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
குக் வித் கோமாளி: மூன்று சீசன்களாக சிறப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் சிவாங்கி குக்காக கலந்து கொண்டார். அதுவரை கோமாளியாக இருந்த சிவானிக்கு வெங்காயத்தைக்கூட சரியாக வெட்டத் தெரியாது. ஆனால், நான்காவது சீசனில் அவர் குக்காக வந்ததும், வெங்கடேஷ் பட் அவரது சமையலை புகழ்ந்து தள்ளினார். அப்போதே, சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து,
ஐந்தாவது சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டு, சன் தொலைக்காட்சியில் டாப் குக்... டூப் குக்... என்ற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கினார். இதையடுத்து, குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு இருவரும் இருந்தனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருந்தனர். இதில் போட்டியாளராக இருந்த பிரியங்காவுடன் பிரச்சனை ஏற்பட்டு விஜய் டிவியில் இருந்து விலகினார் மணி மேகலை.

சீசன் 6 போட்டியாளர்கள்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சுற்றி எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை குஷிப்படுத்தும் வகையில், குக் வித் கோமாளி சீசன் 6 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. இதில், நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, செஃப் கெளஷிக் உள்ளனர். வழக்கம் மேல, இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். இதில் கோமாளியாக பிக் பாஸ் சவுந்தர்யா, குரேஷி, டாலி, புகழ், ராமர், சரத், சுனிதா, பூவையார், சர்ஜுன், பழைய ஜோக்கு தங்கதுரை இந்த சீசனுக்கான கோமாளிகளாக உள்ளனர். அதே போல குக்காக சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்திருந்த உமர் லத்தீப், நந்த குமார், செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, நடிகை மதுமிதா, சுந்தரி அக்கா, சௌந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் ராஜு ஆகியோர் குக்காக உள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதலாவதாக சவுண்ட் சவுந்தர்யா ஜென் கோல்ட் பிரிவில் இருந்து நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பை தேர்வு செய்தார். நேற்று முதல் எபிசோட் தொடங்கியது இதில், செஃப் தாமு இல்லாததால், பலரும் அவர் இல்லையே என கேட்டு வந்ததனர். இந்த எபிசோடுக்கான ஷூட்டிங் நடந்த போது அவர், பத்ம ஸ்ரீ விருது பெற டெல்லி சென்றுவிட்டதால் அவர் முதல் எபிசோடில் பங்கேற்கவில்லை நிகழ்ச்சியில் ரக்ஷன் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











