twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மருத்துவர்களை இழிவுபடுத்தியதா நீயா? நானா?: அரசு மருத்துவர்கள் தர்ணா

    By Mayura Akilan
    |

    சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் மருத்துவர்களை இழிவுபடுத்தியுள்ளதாக அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்துக்கு எதிராகவும், இயக்குநர் ஆண்டனிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    விஜய் டி.வி.யில் ஞாயிறுதோறும் இரவு நீயா? நானா? விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
    கடந்த 17ஆம் தேதி ''மருத்துவர்களும் மருத்துவ பரிசோதனைகளும். என்பது பற்றி விவாதம் நடைபெற்றது. மருத்துவபரிசோதனைகள் அவசியமா இல்லையா என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன.
    ஒருபுறம் பரிசோதனைக்கு ஆதரவு தெரிவிக்கும் மருத்துவர்களும், மறுபுறம் மாற்று கருத்து உடைய மருத்துவர்களும், பொதுமக்களும் பங்கேற்று விவாதித்தனர்.

    சாதாரண நோய்க்கு சிகிச்சைக்குப் போனாலே தேவைக்கு அதிகமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் பேசினார்கள்.

    என்னென்ன நோய்க்கான என்னென்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பது பற்றி மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.

    இதயநோய், தைராய்டு, முடிகொட்டுவது, சிறுநீராக கோளாறு என பலவித நோய்களுக்காக அறிகுறிகளைப் பற்றி கூறும் போது தங்களுக்கு இதைப்போன்ற நோய் இருக்குமோ என்று அஞ்சுவதாக கூறினர்.

    முழு உடல் பரிசோதனை

    முழு உடல் பரிசோதனை

    40 வயதுக்கு மேல் ஆனாலே முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதற்கான பரிசோதனைக்கூடங்களையும் மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். வேறு பரிசோதனைக்கூடங்களில் எடுத்துக்கொண்டு வரப்படும் ரிசல்டுகளை டாக்டர்கள் ஒத்துக்கொள்வதில்லை என்கின்றனர் பொதுமக்கள்.

    ஸ்டெதஸ்கோப் பரிசோதனை

    ஸ்டெதஸ்கோப் பரிசோதனை

    கையை பிடித்து நாடி பார்த்து நோய் கண்டறிந்த காலம் போய் ஸ்டெதஸ்கோப் வைத்து நோயாளிகளை பரிசோதித்தனர் மருத்துவர்கள். இன்றைக்கு எந்த டாக்டர்களுமே ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதிப்பதில்லை, ஸ்கேன், எக்ஸ்ரே என்று வந்துவிட்டதால், ஸ்டெதஸ்கோப் தேவையில்லை என்கின்றனர் டாக்டர்கள்.

    மருத்துவப் பரிசோதனை

    மருத்துவப் பரிசோதனை

    பரிசோதனைக்கூடங்களில் கமிஷன் வருகிறது என்பதற்காக டாக்டர்கள் சில பரிசோதனைகளை பரிந்துரைக்கின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. அதனை சில டாக்டர்கள் ஒத்துக்கொண்டனர்.

    சில மருத்துவர்கள்

    சில மருத்துவர்கள்

    இன்றைக்கு மருத்துவத்துறையில் அனைத்துமே வணிகமயமாகிவிட்டது என்று மருத்துவர்களை குற்றம்சாட்டும் தொனியிலேயே ஆரம்பம் முதல் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டு இருந்த மருத்துவர்கள் அதற்கான சரியான பதிலை கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. காரணம் பெரும்பாலான மருத்துவர்கள் வசூல்ராஜாக்களாக இருப்பதினால்தான் உண்மையிலேயே சேவை மனப்பான்மையில் உள்ள டாக்டர்களின் பெயரும் சமூகத்தில் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறது.

    டாக்டர்களுக்கு இழிவு

    டாக்டர்களுக்கு இழிவு

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் இழிவுபடுத்தப்படுத்தப்பட்டதாக கூறி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும், இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையும் இணைந்து தமிழகம் முழுவதும் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

    போராடிய மருத்துவர்கள்

    போராடிய மருத்துவர்கள்

    சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், இளஞ்சேரலாதன், ராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், செந்தமிழ்பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எதிரான முழக்கம்

    எதிரான முழக்கம்

    இந்த போராட்டத்தில் அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், முதுநிலை பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர். நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

    பின்னர் அரசு டாக்டர் சங்க மருத்துவ செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், தனியார் டி.வி. நிகழ்ச்சியில் டாக்டர்களை தரக்குறைவாக விமர்சித்து உள்ளனர். ‘அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனை கர்ப்பிணி பெண்களுக்கு செய்வதால் குழந்தையின் தலை வழுக்கையாகி விடுவதாக நிகழ்ச்சியில் விமர்சித்துள்ளனர்.

    கர்ப்பிணிகளுக்கு அவசியம்

    கர்ப்பிணிகளுக்கு அவசியம்

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த பரிசோதனை அவசியம். இது போன்ற பரிசோதனை செய்வதால் தான் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கர்ப்ப கால இறப்பு விகிதமும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக குறைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் டாக்டர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது என்று அவர் கூறினார்.

    குரோம்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

    குரோம்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

    இதைப்போல குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு காஞ்சி மாவட்ட மருத்துவ சங்கம் சார்பில் அதன் செயலாளர் ரவி தலைமையில் 20 பெண் மருத்துவர்கள் உள்பட 40 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    English summary
    TamilNadu government doctors has protested against Vijay Tv Neeya Naana program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X