Roja serial:விஷத்துல கூட உள்நாட்டு வெளிநாட்டு விஷம்னு ஆரம்பிச்சுட்டீங்களா

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் முருகனுக்கு காவடி எடுத்த ரோஜாவுக்கு சாக்ஷி இம்போர்ட்டட் விஷம் குடுக்கறாளாம்.

ரோஜா,அணு, ஷாக்ஷி மூணு பேருமே சாந்த மூர்த்தி ஐயா அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்தவங்க இதில் ரோஜா குடும்பத்தைக் கண்டுபிடிச்சுட்ட அணு, தான்தான் பிரியாவா இந்த வீட்டில் காணாமல் போனக் குழந்தைன்னு அவங்க வீட்டுல அடைக்கலம் புகுந்துடறா.

சாக்ஷி தனியா இருக்கா, ரோஜா அர்ஜுனை கல்யாணம்பண்ணிக்கிட்டு, தன் வீடு இதுதான்னு தனக்கு தெரியாமலே வாழ்ந்துகிட்டு இருக்கா.

கொலையில் இருவரும்

கொலையில் இருவரும்

பையா கணேஷை ஆஸ்ரமத்தை நடத்தி வந்த சாந்த மூர்த்தி அய்யாதான் கொன்னுட்டார்னு அவர் மேல் பழியைப் போட்டு,கொலை செய்த அணுவும், சாக்ஷியும் தப்பிச்சுக்கறாங்க. இப்போ சாந்த மூர்த்தி ஐயாவை வெளியில் கொண்டு வரணும், உண்மை குற்றவாளிகள் அணுவையும், சாக்ஷியையும் சிறையில் போடணும். அதோட, ரோஜாவின் உண்மையான அப்பா அம்மா யாருன்னு கண்டு பிடிக்கணும். இதுதான் ரோஜா புருஷன் அர்ஜுனோட டார்கெட். அர்ஜுன் ஒரு வக்கீல்.

அணு வாழ

அணு வாழ

ரோஜா இடத்தில்தான்தான் ரோஜான்னு குடியேறிய அணு அர்ஜுனை முறைப்படி மாமான்னு கூப்பிடறா..அவனை கல்யாணம் செய்துக்கிட்டு ரோஜாவைத் துரத்தி விடணும்னு நினைக்கறா. ஆனால், ரோஜாவும், அர்ஜுனும் கல்யாணம் செய்துகிட்டாங்க.இருவரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சு இருக்காங்க.இந்த சமயத்துலதான் முருகனுக்கு காவடி எடுத்துகிட்டு, நடை பயணமாக கோயிலுக்கு வரும ரோஜாவை கொலை செய்ய அணுவும், சாக்ஷியும் திட்டம் போடறாங்க.

கொலை செய்ய

கொலை செய்ய

ரோஜாவை விஷம் வைத்து கொலை செய்யறதுனால என்ன வந்துடப் போகுதுன்னு தெரியலை. அதோட, பையா கணேஷ் கொலையில் இருந்து தப்பிக்க அர்ஜுனைத்தான் உன்னால கல்யாணம் செய்துக்க முடியலை. அவன் தம்பி அஷ்வினையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த வீட்டில் செட்டிலாகிரு. தம்பி பொண்டாட்டின்னு உன்னை அர்ஜுன் காட்டி கொடுக்க மாட்டான்னு சாக்ஷி சொல்றா..

ஏன் கொலை

ஏன் கொலை

இதுல ரோஜாவை கொலை செய்யறதுனால என்ன பிரயோஜனம்... அதுக்கான மோட்டிவ் என்னனு சரியா சொல்லை. ஆனா, விஷம் மட்டும் இம்போர்ட்டட் விஷமாம். அதை நீர் மோர் பந்தலில் மோர் கொடுத்துக்கொண்டு இருந்த ஒருத்திகிட்ட குடுத்து விஷத்தை கலக்க சொல்லி ரோஜாவுக்கு குடுக்க சொல்றா சாக்ஷி. விஷத்துல உள்நாட்டு விஷம்... வெளிநாட்டு விஷம்னு புதுசா எதுக்கு ஆரபிக்கறீங்க?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X