தயவு செய்து சாக்ஷியை எவிக்ட் பண்ணாதீங்க பிக் பாஸ்: பார்வையாளர்கள் கோரிக்கை
Recommended Video
சென்னை: தயவு செய்து சாக்ஷியை எவிக்ட் பண்ணாதீங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாக்ஷியை பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்த சாக்ஷி தான் பிக் பாஸ் வீட்டின் வில்லி என்று விமர்சனம் எழுந்துள்ளது.
புறம் பேசுவது, அடுத்தவர்களின் முதுகில் குத்துவது சாக்ஷிக்கு கை வந்த கலையாக உள்ளது.

ஜூலி
சாக்ஷி செய்யும் வேலையை எல்லாம் பார்க்கும் பார்வையாளர்கள் ஜூலிம்மா எல்லாம் தங்கம், தேவதை என்று தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்கும் முன்பு வரை கூட ஜூலியை போலி, போலி என்று திட்டியவர்கள் எல்லாம் தற்போது ஃபீல் பண்ணுகிறார்கள். சிநேக்சியுடன் ஒப்பிடும் போடு ஜூலி ஒன்றுமே இல்லை என்று அவரை இத்தனை நாட்களாக திட்டியதை நினைத்து வருத்தப்படுகிறார்கள் பார்வையாளர்கள்.

கள்ள ஓட்டு
சாக்ஷியை பிக் பாஸ் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருப்பது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. சாக்ஷிக்காக பிக் பாஸ் கள்ள ஓட்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கடந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவை காப்பாற்ற ஃபிராடுத்தனம் செய்தது போன்று சாக்ஷிக்காகவும் பிக் பாஸ் ஏதோ செய்கிறார் என்று பார்வையாளர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

பார்வையாளர்கள்
சாக்ஷியை பிக் பாஸ் வீட்டில் இருந்து முறைப்படி எவிக்ட் எல்லாம் செய்யக் கூடாது. அவரை விரட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் எங்களுக்கு நிம்மதி என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு சாக்ஷியின் முகத்தை பார்த்தாலே கடுப்பாகிறார்கள். இது எல்லாம் தெரிந்தும் அந்த சாக்ஷயை தான் அடிக்கடி காட்டி பார்வையாளர்களை கோபம் அடையச் செய்து வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ்.
எரிச்சல்
சாக்ஷியை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது. எதற்கெடுத்தாலும் புகார் சொல்கிறார். பேசினால் புகார், பாடினால் புகார், விளையாடினால் புகார், அப்புறம் எதுக்குமா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தீங்க?. சக போட்டியாளர்கள் சாக்ஷியை பார்த்து பயப்படுவது போன்று உள்ளது. யாரும் அவர் அருகிலேயே வருவது இல்லை. அப்படி இருந்தும் சும்மா நொய், நொய்ய்ன்னு என பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











