For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேரனுக்காக ஓவரா பீல் பண்ணாதீங்க மக்கா.. பிக் பாஸ் பிளானே வேற.. அதை புரிஞ்சுகிட்டா நீங்க பிஸ்தா தான்!

|
Bigg Boss Meera Arrest : பணமோசடி வழக்கில் மீரா கைது- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் யாரும், நிச்சயம் சேரனுக்காக மட்டுமல்ல, எந்தவொரு போட்டியாளருக்காகவும் இரக்கமும் பட மாட்டார்கள், உணர்ச்சிவசப்படவும் மாட்டார்கள்.

தமிழில் பிக் பாஸ் சீசன் 3 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இம்முறை பிக் பாஸில் மக்களிடம் ஏற்கனவே பிரபலமான சேரனும் ஒரு போட்டியாளராகி இருக்கிறார். வீட்டில் நடுநிலையாளராக நடந்து வரும் அவரை, கடந்த சில நாட்களாக தேரை இழுத்து தெருவில் விட்ட ரேஞ்சுக்கு சக போட்டியாளர்கள் வம்பிழுத்து வருகின்றனர்.

இந்த டாஸ்க்கின் மூலம் கடந்த சில தினங்களாக சேரன் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறார். இது அவரது ரசிகர்களை மன வேதனையடைய வைத்துள்ளது. தேசிய விருதெல்லாம் வாங்கிய இயக்குநரை இப்படி தரக்குறைவாக நடத்தலாமா என சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Malar serials: பொண்ட்டாட்டியை உள்ளங்கையில் வச்சு தாங்கறது இதானா?

பிக் பாஸ் திட்டம்:

பிக் பாஸ் திட்டம்:

ஆனால், இந்த இடத்தில் பிக் பாஸ் ரசிகர்களாக மட்டுமல்ல, வெகுஜன மக்களாகவும் நாம் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு பிக் பாஸின் திட்டம் என்ன என்பது நன்றாகவே தெரியும். ஒவ்வொரு போட்டியாளரையும் இது போல் சர்ச்சைகளில் சிக்க வைத்து, நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்துவதுதான் நிகழ்ச்சியின் சாராம்சமே.

எல்லாம் ஸ்கிரிப்ட் மயம்:

எல்லாம் ஸ்கிரிப்ட் மயம்:

ஒவ்வொரு போட்டியாளருக்கும் எதைப் பற்றி பேச வைத்தால், பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்பது பிக் பாஸுக்கு கை வந்த கலை. சினிமாவைப் போல, சீரியலைப் போல பிக் பாஸும் ஒரு தனி வகை நடிப்பதற்கான களம் தான். அங்கு பிக் பாஸ் தரும் ஸ்கிரிப்டைத் தான் போட்டியாளர்கள் பின்பற்றுகிறார்கள்.

சேரன்:

சேரன்:

இதற்கென ஒவ்வொரு போட்டியாளருக்கும், அவரது பிரபலத்தன்மைக்கு ஏற்ப சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசுத் தொகையைத் தாண்டி, இந்த சம்பளம் எனும் காண்டிராக்ட்டில் தான் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனிலேயே அதிக சம்பளம் சேரனுக்குத்தான் எனச் சொல்லப்படுகிறது.

இது தான்காரணம்:

இது தான்காரணம்:

அப்படிப் பார்க்கையில் கடந்த நான்கு வாரங்களாக சேரனை எந்தவித பிரச்சினையிலும் சிக்க வைக்காமல் தான் பிக் பாஸ் இருந்தார். வாரம் தோறும் அவர் நாமினேட் செய்யப்பட்ட போதும், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவரை பிக் பாஸ் காப்பாற்றித்தான் வந்தார். இப்படியே போனால், சேரனுக்கு மக்களிடம் ஆதரவு குறைந்து விடும் என்பதாலேயே, இயக்குநருக்கு ஏத்த ஸ்கிரிப்டை பிக் பாஸ் அரங்கேற்றி விட்டார்.

பிக் பாஸ் ஸ்கிரிப்ட்:

பிக் பாஸ் ஸ்கிரிப்ட்:

சேரனின் ரசிகர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். இதேபோன்ற உணர்ச்சிகரமான எத்தனையோ காட்சிகளை அவர் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இப்போதும் பிக் பாஸ் ஸ்கிரிப்ட் படி தான் எல்லாம் நடக்கிறது. சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான், நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன், நீ அழுகுற மாதிரி அழு' என நடிக்கிறார்கள் அனைவரும்.

அதே பார்முலா:

அதே பார்முலா:

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரிந்தே தான் இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த வாரம் சேரன் மீது சிம்பதி கிரியேட் பண்ணி, அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் காப்பாற்ற வேண்டும் என்பது தான் பிக் பாஸின் திட்டம். தமிழ்ப்பொண்ணு பிரச்சினையின் போது, மதுவுக்கும் இதே பார்முலாவைத் தான் பின்பற்றினார்கள்.

காட்சிகள் மாறும்:

காட்சிகள் மாறும்:

ஆதலால் மக்களே, பிக் பாஸ் நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்கள். இன்று சேரனை தூக்கி வைத்து கொண்டாடும் போட்டியாளர்கள், நாளை வேறொரு போட்டியாளருக்கு ஆதரவாளர்கள் ஆகி விடுவார்கள். பிக் பாஸ் வீட்டில் அவ்வப்போது காட்சிகள் மாறிக் கொண்டே தான் இருக்கும். அங்கு யாருமே நல்லவரில்லை, யாருமே கெட்டவரில்லை. இதை புரிந்து கொண்டால், இந்த நிகழ்ச்சியையும் பொழுதுபோக்கு அம்சமாக நம்மாலும் எளிதாக கடந்து செல்ல முடியும்.

English summary
The bigg boss is planning to create sympathy on director Cheran to escape him from eviction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more