ஹன்சிகா ரசிகரா நீங்கள்?: அப்போ இன்று உங்களுக்கு டபுள் ட்ரீட்
சென்னை: ஹன்சிகா நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இன்று இரவு விஜய் டிவியில் ஹன்சிகா கலந்து கொண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது.
சுந்தர் சி. இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு படம் நாளை ரிலீஸ் ஆகிறது. சேட்டை ஊத்திக் கொண்டதால் ஹன்சிகா இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். இந்நிலையில் ஹன்சிகா கலந்து கொண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஹன்சிகா ஒரு கேள்விக்கு தான் நடிக்கும் பிரியாணி இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து விடை கேட்டார். பிரகாஷ் ராஜ் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஹன்சிகா ரூ.3.2 லட்சம் வென்றுள்ளார்.
அப்படி என்றால் ஹன்சிகா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். அவரை பெரிய திரையிலும் பார்க்கலாம், சின்னத் திரையிலும் பார்க்கலாம்.

ஹன்சிகா
ஹன்சிகாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜ்
வாங்க, வாங்க ஒரு கோடி ஜெயிக்கலாம்.

வணக்கம்
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் ஹன்சிகா.

என்ன பதில் சொன்னீங்க?
சிரித்து பேசிய ஹன்சிகா இறுதியில் ரூ. 3.2 லட்சம் வென்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











