அய்யோ ஆள விடுங்க சாமி.. பிக்பாஸ் பத்தி இனிமே என்கிட்ட எதுவும் கேட்காதீங்க.. ஓட்டம்பிடித்த வனிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : வனிதாவை வெளுத்து வாங்கிய சனம் | Sanam Shetty slammed Vanitha

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக் குறித்து இனிமேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று கும்பிடு போட்டுள்ளார் வனிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார்.

நேற்று லைவ்வாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் வனிதா. அப்போது லாஸ்லியாவுக்கு ஆதரவாக பேசினார். மேலும் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார் வனிதா.

வனிதாவின் பதிலால் சர்ச்சை

வனிதாவின் பதிலால் சர்ச்சை

குறிப்பாக தர்ஷனுக்கு எதிராக இருந்தது அவரது கருத்துக்கள். இதில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியையும் இழுத்துவிட்டார் வனிதா. வனிதாவின் பதிலால் அதிருப்தியடைந்த சனம், அவர் சொல்வதை நம்ப வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் வனிதாவுக்கும் வீடியோ வாயிலாக எச்சரிக்கை விடுத்தார்.

பதில் சொல்ல ஆர்வமில்லை

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பாக தான் கருத்து தெரிவித்த டிவிட்டுகளை நீக்கினார் வனிதா. மேலும் பிக்பாஸ் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தனக்கு ஆர்வமில்லை. எல்லா போலி நாடகங்களுடனும் இருந்துவிட்டேன். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி, இதில் நீங்கள் மிகவும் ஈடுபாடு கொண்டு உங்கள் தலையை உடைத்துக்கொள்கிறீர்கள். யாரும் யாருடனும் சண்டை போட வேண்டாம். எனக்கு உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கிறது.

வேற ஏதாவது கேளுங்க

சமாளிக்க எனக்கு போதுமான வேலை இருக்கிறது. மீண்டும் வீட்டிற்குள் செல்வதை போல் உணரவில்லை. ஆனால் இறுதிப்போட்டிக்கு வேறு வழியில்லை. என்னை மீண்டும் பார்க்க விரும்பும் நபர்கள் தயவுசெய்து இந்த நிகழ்ச்சியைப் பற்றி எனக்கு செய்தி அனுப்புவதை நிறுத்திவிட்டு வேறு எதையாவது என்னிடம் கேளுங்கள். எனக்கு சலித்துவிட்டது.

வொர்த் இல்ல

டிவிட்டரில் அதிகமாக நெகட்டிவிட்டி இருக்கிறது. பல பிரபலங்கள் விலகி இருக்க விரும்புவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் குறித்த எனது கருத்துக்கள் குறித்த ட்வீட்களை நான் நீக்கிவிட்டேன். வெறுப்பை பரப்புவதிலோ அல்லது எங்கள் ஆர்மியினர் மற்றும் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதையோ ஊக்குவிப்பதில் எனக்கு உண்மையில் ஆர்வம் இல்லை. நேரம்தான் வீணாகிறது. வொர்த் இல்ல. இவ்வாறு வனிதா விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X