அதையும் கெடுத்து.. நீயும் கெடுத்துக்காத.. நான் தூரத்திலிருந்தே சொல்லிடுவேன் என்ன நடக்குதுன்னு!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணன் கவினின் காதல் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அட்வைஸ் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக நேற்று ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் சாக்ஷி கவின் பெயரையும் சரவணன் பெயரையும் நாமினேட் செய்தார்.
ஏற்கனவே கவின், சாண்டி, சரவணன் ஆகியோர் ஒரு குரூப் ஃபார்ம் செய்துக்கொண்டு மற்றவர்களை பற்றி பின்னால் பேசி வருகின்றனர். சாக்ஷி அவர்களில் இருவரின் பெயரை ஒரே நேரத்தில் நாமினேட் செய்ததால் காண்டாகியுள்ளனர்.

நான் பேசவில்லை
நாமினேஷன் புராசஸ் முடிந்த உடனே கவின், அவள் ஏற்கனவே யாரை பற்றி என்ன பேசியிருக்கிறாள், இப்போது எப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்கு தெரியும், அதுகுறித்து நான் பேசவில்லை.

அவள் நல்லா இருக்கட்டும்
அவள் என் பெயரை சொன்ன பிறகும், அவளின் பெயரை நான் சொல்லவில்லை. அவள் நல்லா இருக்கட்டும் என்றார் கவின். ஆனால் கவின் கடந்த வாரமே சாக்ஷியின் பெயரை மறைமுகமாக நாமினேட் செய்தார் என்பது பார்வையாளர்களுக்குதான் தெரியும்.

இனிமே அதுக்கிட்ட பேசு
இந்நிலையில் இன்றைய நாமினேஷனை தொடர்ந்து லிவிங் ஏரியாவில் கவின், சாண்டி, சரவணன் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது சாண்டி, இனிமே அதுக்கிட்ட பேசு அப்புறம் இருக்கு என சாக்ஷியை குறித்து கூறுகிறார்.

மறுத்த கவின்
மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து முதல் இரண்டு வாரங்கள் கவின், நார்மலாக இருந்தான், சாக்ஷியுடன் காதலில் மூழ்கிய பிறகு ஆளே மாறிவிட்டான், நார்மலாக இல்லை என்றார் சாண்டி. உடனே அதற்கு மறுப்பு தெரிவித்தார் கவின்.

இல்லையண்ணா
இதைத்தொடர்ந்து பேசிய சரவணன், இப்போது வேறொன்றில் மூழ்கிக்கொண்டீருக்கிறான் என கவின் - லாஸ்லியா காதல் விவகாரத்தை எடுத்தார். அதற்கும் மறுப்பு தெரிவித்த கவின், அப்படியெல்லாம் இல்லையண்ணா என்றார்.

அதையும் கெடுத்து
அதனை நம்பாத சரவணன் நான் தூத்தில் இருந்து பார்த்தாலே கூறிவிடுவேன் என ஒரே போடாக போட்டு கவினின் வாயயை அடைத்தார். மேலும் அதையும் கெடுத்து நீயும் கெடுத்துக்காத என்றும் கவினுக்கு அட்வைஸ் செய்தார் சரவணன். அப்போது நீ பெரிய தங்கபதக்கம் சிவாஜிகணேசன் என்றெல்லாம் பெயர் வாங்கவில்லை, இருக்கும் பெயரை கெடுத்துக்கொள்ளாதே என்றுகூறி காமெடியும் செய்தார்.


Click it and Unblock the Notifications











