Thirumanam Serial: இரவு 8 மணிக்கும் அடுத்து உடனே 10 மணிக்கும் திருமணமா?

சென்னை: இரவு 8 மணிக்குத் திருமணம் அடுத்து அதே இரவு 10 மணிக்குத் திருமணம். ஒன்னும் இல்லைங்க... கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி அடுத்த ஒளிபரப்பு அதே இரவு 10 மணிக்கு. சீரியல் மிஸ் பண்றவங்களுக்கு இது லட்டு மாதிரியான வாய்ப்பு இல்லை?

கலர்ஸ் தமிழ் டிவியில் டக்கென்று மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல்களில் திருமணம் சீரியலும் ஒன்று. கதை மெதுவாக நகர்ந்தாலும், சந்தோஷும் ஜனனியும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்கிற ஆதங்கத்திலேயே சீரியலை ரசிகர்கள் பார்த்து வந்தனர். இதில் ஜனனியாக நடிக்கும் நடிகை ஷ்ரேயா நல்ல குடும்பப்பாங்கான அழகு.

பெங்களூருவின் மங்களூரில் பிறந்த ஷ்ரேயா, மாடலிங் செய்துக்கொண்டே கல்லூரியில் படித்து வந்தவர். பின்னர் கன்னட படம், சன் டிவி மற்றும் உதயா டிவியில் ஒளிபரப்பான அரண்மனை சீரியல் என்று சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தவர்.

திருமணம் சீரியல்

திருமணம் சீரியல்

திருமணம் சீரியல், கன்னட சீரியலின் மொழியாக்கம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சீரியலில் ஜனனியாக நடித்து, உலகத் தமிழர்கள் மனதில் இடம் பிடிச்சு இருக்கார் ஷ்ரேயா.திருமணம் சீரியல் ஜனனி சந்தோஷ் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்கவுட் ஆகி இருந்தாலும், சீரியலில் புருஷன் பொண்டாட்டி சேராமல், சந்தோஷ் காதலி சக்தியுடன் வாழ விரும்புவது போலவே கதை சென்றுக்கொண்டு இருந்தது.

சக்தி வருகை

சக்தி வருகை

ஒரு வழியாக ஜனனியிடம் நெருங்குவான், ஜனனியும் ஆசையா இருப்பா... உடனடியா சந்தோஷின் காதலி சக்தி சிங்கப்பூரில் இருந்து வந்துவிடுவாள். பின்னர் சந்தோஷ் சக்தி சக்தி என்று அலைவதாக கதை இருந்தது. ஒரு வழியா சக்தியை கெட்டவள் என்று காண்பித்து, சந்தோஷ் ஜனனியை லவ் பண்ணி அவளுடன் வாழ விரும்புவதாக கதையை கொண்டு சென்றார்கள்.

வாழ ஆரம்பித்தாலும்

வாழ ஆரம்பித்தாலும்

இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சு இருந்தாலும், ஜனனிக்கு கருப்பை வீக்காக இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க. அவளுக்கு குழந்தை உண்டாகி இருக்கிறது. ஜனனியுடன் இருக்க வேண்டும் என்று சந்தோஷ் ஆசைப்பட, ஆஃபீசில் அண்ணி மாயா கொடுக்கும் டார்ச்சர் அதிகமாய் விடுகிறது.அப்பாவும் ஊரில் இல்லை. ஆஃபீஸை கட்டிக் காக்கும் பொறுப்பும் சந்தோஷுக்கு இருக்கு.

இடையில் நடிகை ஊர்வசி

இடையில் நடிகை ஊர்வசி

இடையில் மன நல மருத்துவராக நடிகை ஊர்வசியும் பல எபிசோடுகளில் நடிச்சு இருந்தார். எப்படியாவது பார்வையாளர்களை ஈர்த்துவிட வேண்டும் என்று செயல்பட்ட கலர்ஸ் தமிழ் டிவியின் யுக்தி கைக்கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதில் ஜனனியின் தங்கையாக நடித்த அனிதாதான் இப்போது சித்தி 2 சீரியலில் வெண்பாவாக நடிக்கும் கதாநாயகி.

திருமணம் சீரியல்தான் முதலில் இரவு 8 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 10 மணிக்கும் என்று கலர்ஸ் தமிழ் டிவி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X