twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாய் அப்பவே மக்களுக்கு சொட்டு நீர் பாசனம் சொல்லிட்டார்!

    |

    சென்னை: சன் டிவியின் ஷீரடி சாய் பாபா சீரியலில் சாய், தண்ணீர் சிக்கனம் பற்றி பல விதத்திலும் மக்களுக்கு எடுத்து சொல்லி இருக்கார்.

    அந்த காலத்தில் குளம், குட்டைகள், கிணறு இவற்றில் இப்போது உள்ளது போல ஆழம் இருக்காது.மழை காலத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் வெயில் காலத்தில் மிகவும் அடியில் தேங்கி விடுவதும் உண்டு.

    சில சமயம் தண்ணீர் சுத்தமாக வறண்டு போவதும் உண்டு.இந்த மாதிரி சமயத்தில் மட்டும்தான் அந்த காலத்தில் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

    மாஸ், கிளாஸ், செம: நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை பாராட்டிய சிவா, விக்கி, வெங்கி மாஸ், கிளாஸ், செம: நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை பாராட்டிய சிவா, விக்கி, வெங்கி

    குல்கர்னி ஏமாத்துக்காரன்

    குல்கர்னி ஏமாத்துக்காரன்

    சீரடியில் குல்கர்னி பெரும் பணக்காரன்... மக்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து ஒன்றுக்கு இரண்டாக பணம் வசூலிப்பவன். மக்களை ஏமாத்த எந்த சமயத்தையும் பயன்படுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதிப்பவன்.மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்க நினைக்கிறான்.

    செடி கொடி வாடாமல்

    செடி கொடி வாடாமல்

    செடி,கொடிகளுக்கு...பறவை பட்சிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் என்றும், அப்படிப்பட்ட காலக் கட்டங்களில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது மனிதர்களாகிய நமது கடமை என்றும் மக்களுக்கு எடுத்து சொல்கிறார். ஒரு பானையில் சிறிய துளை போட்டு, அதில் சணல் கயிற்றை திணித்து,செடிகளின் மேல் பானையை கட்டித் தொங்க விட்டு செடிக்கு மட்டும் சொட்டு சொட்டாக நீர் சேருவது பற்றி பிள்ளைகளுக்கு கற்றுத் தருகிறார்.

    ஏமாற்றும் குல்கர்னியின் சதி

    ஏமாற்றும் குல்கர்னியின் சதி


    ஊருக்கு எல்லையில் மக்களுக்கு சொந்தமானதாக இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து,வேறு எங்கோ எடுத்து வந்தது போல,வண்டியில் தண்ணீர் எடுத்து வந்து ஒரு பானை தண்ணீர் 4 பைசா என்று விற்கிறார். இதனால் மக்கள் தவிப்பில் இருக்க, உங்களுக்கு சொந்தமான தண்ணீர்தான் அது என்று மக்களுக்கு சாய் உணர்த்துகிறார்.

    ஏமாறுபவர்களும்,ஏமாற்றுபவர்களும் அந்த காலத்திலிருந்தே நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    தண்ணீரின் விலை அதிகம்

    தண்ணீரின் விலை அதிகம்

    அந்த காலத்திலலேயே மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்குவது இருந்த நிலையில், மக்களின் இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன் படுத்திகிட்ட குல்கர்னி, மக்களுக்கு சொந்தமான தண்ணீரை எடுத்து, ஒரு நாளைக்கு 2 பைசா,அடுத்த நாள் 4 பைசா..அடுத்த நாள் 8 பைசா என்று விற்றதினால்தான் மக்கள் உதவி கேட்டு சாயிடம் செல்கிறார்கள்.

    உங்கள் உரிமையை நீங்கள்

    உங்கள் உரிமையை நீங்கள்

    சாய் சொல்றார்...குல்கர்னி உங்களுக்கு உதவி செய்யறேன்னு சொன்னப்பவே நான் சொன்னேன் இல்லையா...நீங்களே கொஞ்சம் நேரம் செலவிட்டால் ஊருக்கு வெளியே இருக்கும் நீர் நிலையில் தண்ணீர் எடுத்து வரலாம் என்று. அப்போது நீங்கள் உங்கள் உரிமையை உணரவில்லை... இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்ச நேரத்தை செலவிட்டால் அதனால் நாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை என்று சாய் கூற மக்களுக்கு புத்தி வருது.

    English summary
    Sun TV's Shirdi Sai Baba has been telling people about the tilt of water and water in many ways.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X