twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்த் தொலைக்காட்சிகளில் இந்தி தொடர்களின் ஆதிக்கம்!

    By Mayura Akilan
    |

    தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் தமிழ் பேசும் இந்தித் தொடர்கள் தற்போது அதிகம் ஒளிபரப்பாகிவருகின்றன. தூர்தர்சன் காலத்தில் சாந்தி, ஜூனூன் என சில தமிழ் பேசும் இந்தி தொடர்கள் ஒளிபரப்பானது.

    அப்போது வேறு வழி இல்லை என்பதால் மக்களும் பொழுது போக்காக உடைந்த தமிழில் பேசி கொலை செய்தாலும் பரவாயில்லை என்று அந்த தொடர்களைப் பார்த்து பொழுது போக்கினர்.

    சன் டிவியின் வருகையினால் படிப்படியாக தமிழ் தொடர்கள் ஆதிக்கம் அதிகமானது பாலச்சந்தர், ஏ.வி.எம், விகடன் போன்ற ஜாம்பவான்கள் டிவி தொடர்களை எடுத்தனர். ஆனால் இன்றைக்கு பிரபல நடிகைகளுக்கு அதிக அளவு பணம் கொடுத்து எடுக்கப்படும் சீரியர்களுக்கு வரவேற்பு குறைந்து வருவதால் பெரும்பாலான சேனல்கள் மீண்டும் இந்தி டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன.

    ராஜ், விஜய், பாலிமர், ஜீ

    ராஜ், விஜய், பாலிமர், ஜீ

    சன் டிவியைத் தவிர்த்து நெடுந்தொடர்களை ஒளிபரப்பும் ராஜ் டிவி, விஜய் டிவி, பாலிமர்டிவி, ஜீ தமிழ் சேனல்கள் அதிக அளவில் டப்பிங் தொடர்களை ஒளிபரப்புகின்றன.

    சிந்து பைரவி 700

    சிந்து பைரவி 700

    ராஜ் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சிந்து பைரவி' தொடர், 700-வது எபிசோடை கடந்துள்ளது. சிந்துவுக்கும் பைரவிக்கும் இடையேயான போராட்டம், பலவித பரபரபரப்பை தக்கவைத்துக் கொண்டு தொடர்கிறது தொடர்.

    மறுமணம் தொடர்

    மறுமணம் தொடர்

    ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் மறுமணம். புனர் விவாக என்ற இந்தித் தொடர்தான் மறுமணமாக வந்து தமிழ் பேசுகிறது. முதல் திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள் மறுமணத்திற்குப் பின்னராவது சரியாகிறதா என்பதை உணர்த்தும் தொடர் இது

    காதல் தொடர் உள்ளம் கொள்ளை போகுதடா

    காதல் தொடர் உள்ளம் கொள்ளை போகுதடா

    காதலித்து திருமணம் செய்வது ஒருவகை, திருமணம் செய்து கொண்டு காதலிப்பது காலத்தை வென்ற காவியமாக்கும். இளமைக் காலம் முழுவதும் தன் குடும்பத்திற்காக உழைத்த ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது ஏற்படும் மாற்றங்களை எதார்த்தமாக பதிவு செய்திருக்கின்றனர். பாலிமர் சேனலில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

    காற்றுக்கென்ன வேலி

    காற்றுக்கென்ன வேலி

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், ‘காற்றுக்கென்ன வேலி'. வைசாலி பிறவியிலேயே பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவள். இவள் மீது அதீத அன்பு கொண்ட இவளின் தாய் சிநேகா நோயுற்று மரணமடைகிறாள். தாயின் மறைவுக்குப் பின் பெரியம்மா வீட்டுக்குப் போகும் வைசாலி, அங்கே பெரியம்மாவின் மகள் ரத்னாவுடன் இணைந்து போகிறாளா? அவர்களுக்குள் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் தொடரை சுவாரசியமாக்குகின்றன.

    விஜய் டிவியில் கலர்ஃபுல் சீரியல்கள்

    விஜய் டிவியில் கலர்ஃபுல் சீரியல்கள்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘உறவுகள் தொடர்கள்' தொடர் குடும்ப உறவுகளைப் பற்றியது. தெய்வம் தந்த என் தங்கை தொடர் சகோதரி பாசத்தை உணர்த்துகிறது. அதேபோல் கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பை உணர்த்தும் தொடர் ‘என் கணவன் என் தோழன்'. இந்தத் தொடர்கள் மதிய வேளையில் ஒளிபரப்பாகிறது. இவை பெரும்பாலும் ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்தித் தொடர்கள்.

    சக்தியின் வல்லமை தாராயோ

    சக்தியின் வல்லமை தாராயோ

    ஒரு பெண் வாழ்க்கையில் ஜெயிக்க அழகு முக்கியமல்ல திறமைதான் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தும் தொடர் இது. பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    மனம் மயக்கும் மதுபாலா

    மனம் மயக்கும் மதுபாலா

    சினிமா படப்பிடிப்புத் தளத்தில் பிறக்கும் ஒரு பெண்ணின் கதையை மையப்படுத்தி உருவான தொடர் மதுபாலா. இன்றைய சினிமா நூற்றாண்டுகால வரலாற்றினை உடையது. இதனை நினைவு கூறும் விதமாக கலர்ஸ் டிவியில் மதுபாலா என்ற டிவி தொடர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மக்களின் அதிக வரவேற்பினை பெற்ற இந்த தொடர் பாலிமர் டிவி மூலம் தமிழ் பேசுகிறது.

    செலவு குறைவு வருமானம் அதிகம்

    செலவு குறைவு வருமானம் அதிகம்

    இந்தி தொடர்களை டப்பிங் செய்வதன் மூலம் செலவு குறைகிறது என்கின்றனர் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள். நேரடியாக தயாரிக்கும் போது நடிகர்களின் சம்பளம், ஷூட்டிங் என அதிக ரிஸ்க் இருக்கிறது. அதே டப்பிங் தொடர் என்றால் குறைந்த விலைக்கு சீரியல் ரைட்ஸ் வாங்கி டப்பிங் பேசுபவர்களுக்கு சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும்.

    ரசிக்கும் இல்லத்தரசிகள்

    ரசிக்கும் இல்லத்தரசிகள்

    தமிழ் தொடர்களைப் போல அல்லாது இந்தித் தொடர்களில் அனைவருமே அழகான உடைகள், மேக்அப் என அசத்தலாக இருப்பதாக கூறுகின்றனர் அந்த தொடரை ரசிக்கும் இல்லத்தரசிகள்.

    தெலுங்கு பேசும் தமிழ் தொடர்கள்

    தெலுங்கு பேசும் தமிழ் தொடர்கள்

    இது ஒருபுறம் இருக்க தமிழ் பேசும் தொடர்கள் பெரும்பாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசி அந்தந்த மாநில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.

    English summary
    Dubbed hindi popular serials are rocking Tamil TV channels and making huge impact among the audiences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X