Aranmanai kili serial: துர்காவுக்குத்தான் மனசாட்சி இல்லேன்னா ஆஸ்ரமத்தில் இருப்பவருக்குமா?

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் வரம்பு மீறி ஜானுவுக்கும், அர்ஜூனுக்கும் கெடுதல் நினைக்கறா துர்கா. இவளுக்கு ஆதரவாக ஆஸ்ரமத்தில் இருப்பவரும் செயல்பட சீரியல் ஆர்வலர்களுக்கு கோவம்தான் வருது.

நடக்க முடியாத அர்ஜுனை, எப்படியாவது நடக்க வைத்துவிட வேண்டும் என்று ,அர்ஜுனின் மனைவி ஜானகி என்னென்னவோ முயற்சி செய்கிறாள். அத்தனை முயற்சிகளையும் துர்கா ஆஸ்ரமத்தில் ஒருவரை சேர்த்துக்கொண்டு முறியடிக்க நினைக்கிறாள்.

அனைத்திலும் வெற்றி பெற்று வந்தாலும், கடைசியில் எதோ ஒரு விதத்தில் தடங்கல் வந்துருது. இருந்தும் சோர்ந்து போகாமல் ஜானகி சுவாமிஜியிடம் கேட்டு பல விரதங்கள் மேற்கொண்டு, இப்போது கடைசி கட்டம் வந்தாச்சு.

ஹோம குண்டம்

ஹோம குண்டம்

வைத்தியர் சுவாமிஜி வாசுகி பாம்பு வந்து அர்ஜுன் காலைத் தீண்டினால் அர்ஜுன் எழுந்து நடப்பான் என்று சொல்லி, அதை வழிபட்டு விட்டு வர ஜானுவையும், அர்ஜுனையும் வனத்தில் நாக தேவர்கள் வசிக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார். அங்கும் வாசுகி பாம்புக்கு பூஜையும் நல்ல விதத்தில் செய்துட்டு வந்துடறா.இப்போது வாசுகி பாம்பை ஆஸ்ரமத்துக்கு வரவைக்க வேண்டியதுதான் பாக்கி.

மீனாட்சி ஜானு

மீனாட்சி ஜானு

மீனாட்சி அம்மா ஜானுவை வரவழைச்சு, இதோ பார்...இந்த பூஜை, விரதம், வைத்தியம் இதெல்லாம் விட்டுட்டு என்கூட ரெண்டு பேரும் வரப் போறீங்களா இல்லையான்னு, ஜானுவிடம் மீனாட்சி அம்மா கேட்கறாங்க.இல்லம்மா நீங்க வேற எதை வேணும்னாலும் செய்ய சொல்லுங்க. இதை மட்டும் நான் செய்ய மாட்டேன்னு தைரியமா சொல்றா ஜானு. சரி என்னதான் நடக்குதுன்னு ஆஸ்ரமத்துக்கு போய் பார்க்கப்போற துர்காவிடமே ஹோம குண்டத்தை சுமந்து வந்து ஜானுவிடம் கொடுக்கும் பணியை ஒப்படைக்கிறார்.

மகிழ்ச்சி துர்காவுக்கு

மகிழ்ச்சி துர்காவுக்கு

அடடா அந்த ஹோம குண்டத்தில் வெட்டி மருந்து வெடிக்க செய்து, ஜானுவை சாகடிச்சுடலாம்னு நினைக்கறா துர்கா.ஆஸ்ரமத்தில் இவளுடன் கூட்டு சேர்ந்து இருக்கும் ஒருவர், என்னம்மா இப்போ, ஹோம குண்டத்தில் வெடி மருந்து வைக்கப் போறீங்கன்னு சொன்னீங்க. கடைசியில் ஹோம குண்டம் சுமக்கும் பொறுப்பையே உங்களிடம் ஒப்படைச்சு இருக்காரேன்னு சொல்றார். அது எனக்கு இன்னும் வசதியா போச்சுன்னு சொல்றா துர்கா.

ஒத்துக்கலை சித்தி

ஒத்துக்கலை சித்தி


சித்தியை சும்மா மயக்கம் வந்த மாதிரி நடிங்க சித்தி. அர்ஜுனும், ஜானுவும் பதறிப் போய் வந்து நிற்பாங்க. எல்லாத்தையும் விட்டுடுங்கன்னு சொல்லி நம்மோட அழைச்சுட்டு போலாம்னு சொன்னா, சித்தி நடிக்க மாட்டேன்னு சொல்றாங்கன்னு துர்கா ஆஸ்ரமத்து நண்பரிடம் சொல்ல, அவங்க நடிக்கலேன்னா இப்போ என்னம்மா, நிஜமா அவங்க மூச்சு திணறும் மாதிரி செய்திருவோம்னு அவர் மனசாட்சியே இல்லாமல் சொல்றார்.

இத்தனை நாள் ஆஸ்ரமத்தில் அவர் என்ன கத்துக்கிட்டார்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X