Eeramaana Rojaave 2 :மனைவியின் முன்னாள் காதலன் தம்பியா.. பார்த்திக்கு தெரியவரும் உண்மை!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக ஈரமான ரோஜாவே 2 தற்போது பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
ஜோடி மாறிய திருமணம், அது ஏற்படுத்தும் பிரச்சினைகள், பிரச்சினைகள் தீர்ந்த நேரத்தில் வில்லியின் ஆட்டம் என இந்தத் தொடர் அடுத்தடுத்த கட்டங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
ஜீவா -பிரியா மற்றும் காவ்யா -பார்த்தி என இரு ஜோடிகளின் திருமணம் மாறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் இந்தத் தொடரின் கதைக்களமாக காணப்படுகிறது.
மனைவியின் காதலன் குறித்து பார்த்திக்கு தெரியவரும் உண்மை:விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா தொடர்களுக்கு அடுத்தப்படியாக ஈரமான ரோஜாவே 2 காணப்படுகிறது. இந்தத் தொடரில் அண்ணன் தம்பிகளாக பார்த்தி மற்றும் ஜீவாவும், அக்கா தங்கைகளாக பிரியா மற்றும் காவ்யா இருந்த நிலையில், பார்த்திக்கும் பிரியாவிற்கும் நடைபெறவிருந்த திருமணத்தில், பிரியா கடத்தப்பட, பார்த்திக்கு ஜோடியாகிறார் காவ்யா.
இதையடுத்து ஜீவாவிற்கு பிரியா ஜோடியாக, இரண்டு ஜோடிகளும், ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ள தயங்க, பிரச்சினைகள் வெடிக்கிறது. இதையடுத்து பல சந்தர்ப்ப சூழல்களில் இரு ஜோடிகளும் தங்களை புரிந்துக் கொள்வதில் சுமூகம் ஏற்படுகிறது. தன்னுடைய மகனின் வாழ்க்கையை காவ்யா கெடுப்பதாக யோசிக்கும் மாமியார், அவரை பிரிக்க நினைக்க, தன்னுடைய பொறுமையான அணுகுமுறையால் அவரது மனதை மாற்றுகிறார் காவ்யா.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இரண்டாவது மகன் ஜீவாவைதான் காவ்யா காதலித்தார் என்பதை அறிந்துக் கொள்ளும் மாமியார், காவ்யா வாழ்க்கை கெட தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, அவரை ஏற்றுக் கொள்கிறார். இதையடுத்து பார்த்தியுடன் இணைகிறார் காவ்யா. இந்நிலையில், தன்னுடைய மகளின் வாழ்க்கையை கெடுத்த பார்த்தியின் வாழ்க்கையை கெடுக்கும் நோக்கத்தில் அவரது அத்தை ஜீவாவும் காவ்யாவும் முன்னாள் காதலர்கள் என்பதை சபையில் போட்டு உடைக்கிறார்.
இதனால் தான் காவ்யாவை வேண்டாம் என்று தான் முன்னதாகவே கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதன்பிறகு காவ்யாவிடம் பார்த்தி எந்த உரிமையில் பேசுவார் என்றும் கேட்கிறார். காவ்யாவிடம் நெருங்கும் போதெல்லாம் அவரது தம்பி ஜீவாவின் முகம்தானே நியாபகத்திற்கு வரும் என்றும் கேட்கிறார். செய்வதறியாது திகைக்கிறது இரண்டு ஜோடிகளும். இதனிடையே, முன்னதாக இந்த விஷயத்தை தெரிந்துக் கொண்டுள்ள, பார்த்தியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் திகைக்கின்றனர்.
பார்த்தியின் அப்பா, தன்னுடைய அக்காவிடம், தொடர்ந்து எதுவும் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுவதாக இன்றைய ப்ரமோ காணப்படுகிறது. நீண்ட நாட்களாக இந்த உண்மை தெரியாமல் அடை காத்து வந்தது இந்தத் தொடர். இந்நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டு ஜோடிகளும் ஏறக்குறைய இணைந்துள்ள நிலையில், தொடர் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











