ஈரமான ரோஜாவே2: எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கும்..எபிசோடு முழுக்க ஒரே ஷாட்டா?கடுப்பாகும் ரசிகர்கள்!

சென்னை : ஈரமான ரோஜாவே முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, ஈரமான ரோஜாவே சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து கதை நல்ல சுவாரசியமாக செல்கிறது.

இந்த தொடரில் திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா சார்ல்டன், சித்தார்த் குமரன், சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இளசுகளை ஈர்க்கும் வகையில் காதலை மையமாக வைத்த கதை நகர்கிறது.

ஈரமான ரோஜாவே 2

ஈரமான ரோஜாவே 2

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடர் இளைஞர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம் இதிலும் ஹீரோ. இவருடன் தேன்மொழி எம்.பி.ஏ சீரியலில் நடித்த சித்தார்த்தும் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவரும் ஏற்கெனவே பல சீரியல்களில் நடித்து இருப்பதால் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாறி மாறி திருமணம்

மாறி மாறி திருமணம்

ஈரமான ரோஜாவே சீசன் 2 கதை ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் சென்றது. இதையடுத்து, அண்ணனின் கல்யாணத்தில் பெண் காணமல் போக, கடைசியில் தம்பி காதலித்தை பெண்ணை அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார். அதுமட்டும் இல்லாமல், அண்ணன் கல்யாணம் செய்ய இருந்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார். அப்படி மாறி மாறி திருமணம் நடக்கிறது.

மனதில் இடம் பிடிக்க

மனதில் இடம் பிடிக்க

சரி நடந்தது நடந்து போச்சு, இனி அடுத்து என்ன என யோசித்து ஜோடிகளும் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். பிரியாவும் ஜீவாவும் நெருக்கமாகி வருகின்றனர். ஆனால் பார்த்தி காவ்யா விஷயத்தில் அது அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறது. காவ்யாவின் மனதில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என பார்த்திபன் பல அகாஜூகா வேலைகளை பார்த்து வருகிறார்.

சோறுதான் முக்கியம்

சோறுதான் முக்கியம்

இந்நிலையில்,நேற்றை எபிசோடில், காவ்யா போனில் சாப்பாட்டை ஆர்டர் செய்து காத்திருக்கிறார். இதைதெரிந்து கொண்ட பார்த்திபன் வீட்டுக்கு வந்த டெலிவரிபாயிடம் சாப்பாட்டை வாங்கி வைத்துக்கொண்டு காவ்யாவிடம் சாப்டீயா என கேட்க அவர், ஆர்டர் செய்திருக்கிறேன் வந்துவிடும் என கூறுகிறார். இப்போவே நேரம் ஆகிவிட்டது இதுக்கு மேல் டெலிவரிபாய் வந்து நீ எப்போ சாப்பிடுவா, நான் மீன், சிக்கன் எல்லாம் சமைத்து இருக்கிறேன் என்னுடன் சாப்பிடவா என்கிறார். காவியாவும் சோறுதான் முக்கியம் என சாப்பிடுகிறார்.

பெட்டரா யோசிங்க

பெட்டரா யோசிங்க

இந்த ஒரே காட்சியைவைத்துக் கொண்டு நேற்றை முழு எபிசோடையும் ஓட்டிவிட்டார்கள். காவியா சாப்பிட போலாமா வேண்டாமா என மனதிற்குள் பேசுவதும், பார்த்திபன் எப்படியும் நீ வந்து தானே ஆகனும்னு என மனதிற்குள் பேசுவது செயற்கைத்தனமாகவே இருக்கிறது. எப்படியாவது இந்த முழு எபிசோடையும் இந்த சாப்பாட்டு காட்சியோடு முடித்துவிட வேண்டும் என பிளான் போட்ட இயக்குநர் அதை கச்சிதமாகவே செய்துள்ளனர். ஆனால், இதைபார்க்கும் நமக்குத்தான் என்னடா இதெல்லாம் என கடுப்பாக இருக்கிறது. சீரியல் இயக்குநர்கள் இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசித்தால் நல்லா இருக்கும்

More from Filmibeat

Read more about: eeramaana rojaave season 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X