மூச்சு வாங்க வாங்க..ஈரமான ரோஜாவே சீரியல் மாமியார் செய்த தரமான சம்பவம்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சீரியல் நடிகை மீனா வேமுரி மூச்சு வாங்க வாங்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா சார்ல்டன், சித்தார்த் குமரன், சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை மீனா வேமுரி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல் வீடியோவை பகிர்ந்து அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.
ஈரமான ரோஜாவே: ஈரமான ரோஜாவே முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றத் தொடராக இருந்தது. இந்த தொடரில் பவித்ரா, புதுமுக நடிகர் திரவியம், சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஒரு பெண் தன் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து எப்படி முன்னேறுகிறாள் என்பதும் தான் ஈரமான ரோஜாவே சீரியலின் கதை.
ஈரமான ரோஜாவே2: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இரண்டாம் பாகத்தில் சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தொடர் தற்போது வரை 400 எபிசோடுகளை கடந்துவிட்டது.
பல சீரியல்களில்: இந்த தொடரில், பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை மீனா வேமுரி இதற்கு முன்பு சன் டிவி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை சினிமாவிலும் துணை நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

மூச்சு வாங்க வாங்க: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனா வேமுரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ரீல்ஸ் வீடியோவை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது, மூச்சு வாங்க, வியர்வை சொட்ட சொட்ட ஜாகிங் போன வீடியோவை வெளியிட்டு, எடையை குறைக்க ஒரு மணிநேரம் நடந்தேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன மாமியாரே ஓவரா மூச்சு வாங்குது என நக்கலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











