Eeramana rojave 2:உயிருக்குப் போராடும் காவியாவின் கணவர்..அடுத்து என்னவாகும் இன்றைய எபிசோடு!

சென்னை : விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நிகழ்ச்சியில் பார்த்திபன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்.

ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் இன்றைய எபிசோடில், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில், அதற்காக பயிற்சி வகுப்பிற்கு சென்ற காவியா தீ விபத்தில் மாட்டிக் கொள்கிறார்.

தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக தனது கணவர் பார்த்திபனுக்கு போன் செய்து காவியா கூற அடித்துபிடித்துக்கொண்டு கோச்சிங் சென்டருக்கு வருகிறார் பார்த்திபன். இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுடன் பார்த்திபனும் இணைந்து காவியாவை தேடி அவளை மீட்டு வருகிறார்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

இருப்பினும் பார்த்திபனுக்கும் காவியாவுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவருக்கும் சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாகவும் இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கூறுகிறார். இதனால், மொத்த குடும்பமே சோகத்தில் மூழ்குகிறது. இதை கேட்டு கதறி அழுத பார்வதியை ஜீவா சமாதானப்படுத்துகிறார்.

கண் விழித்த காவியா

கண் விழித்த காவியா

இதையடுத்து காவியா கண் விழித்துவிட்டதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர் உறவினர்களிடம் கூற, அவர்கள் அனைவரும் நிம்மதி அடைந்த நிலையில், ஆனால், பார்த்திபனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை, அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். ஒரு மணிநேரத்திற்குள் அவர் கண்விழிக்கவில்லை என்றால் கோமா நிலைக்கு சென்று விடுவார் என்று மருத்துவர் கூறுகிறார்.

புலம்பிய பார்த்திபன்

புலம்பிய பார்த்திபன்

இதைக்கேட்டு குடும்பமே அழுது புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், பார்வதி, பார்த்திபனின் அருகே சென்று, கண்னை திறந்து அம்மாவை பாருடா என அழுது புலம்புகிறார். ஆனால்,பார்த்திபன் காவியா... காவியா என்று புலம்புவதை கேட்டு அருகே வரும் காவியா பார்த்திபனை அன்போடு அழைக்க உடனே பார்த்திபன் கண்விழித்துப் பார்க்கிறார்.

உயிருக்குப் போராடிய கணவன்

உயிருக்குப் போராடிய கணவன்

உயிருக்குப் போராடிய கணவரை ஒரே வார்த்தையில் உயிர் கொடுத்த காவியாவின் கையை பார்த்திபன் இறுக்கமாக பிடிக்கிறார். காவியாவும் பார்த்திபன் கையை பிடித்து இருவரும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இத்தனை நாளாக கணவரை படாதபாடுபடுத்திய காவியா ஒருவழியாக பார்த்திபனை இனி ஏற்றுக் கொண்டுவிடுவார் என்று சீரியல் ரசிகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர். இன்றைய சோபிசோடு இவ்வாறு முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X