Eeramana Rojaave Serial: கால் ஸ்லிப்பாகி கன்னத்துல லிப் ஆயிருச்சாமே... அப்டீன்னா?

சென்னை: நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அதை மொத்தமா கொடு என்று மன்னன் படத்தில் ஒரு பாடல் உண்டு. அதில் அடியைக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு முத்தம் கேட்பார்கள். இங்கு முத்தத்தைக் கொடுத்துவிட்டு முத்தமாவே திருப்பிக் கொடு என்று கேட்கும் சுவாரஸ்யம் எப்படி இருக்கிறது பாருங்கள்.

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலா, புகழ் ஒரு காதல் ஜோடி என்றால், மலர், வெற்றி இன்னும் ஒரு காதல் ஜோடியாக இளம் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல், ஊடலுக்காகவே இளைஞர்கள் ஈரமான ரோஜாவே சீரியலை விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

மலர், புகழ் இருவரும் அக்கா தங்கை.. வெற்றி, புகழ் இருவரும் அண்ணன் தம்பிகள், அக்கா மலருக்கும், அண்ணன் வெற்றிக்கும் கல்யாணம் ஆனது. தங்கை அகிலாவுக்கும் தம்பி புகழுக்கும் கல்யாணம் நடந்து இருக்கிறது. இந்த இரு ஜோடிக்கும் இன்னும் முதலிரவு நடக்கவில்லை என்பதுதான் சீரியலின் ஹைலைட்.

 வெற்றி மலர் புகழ் அகிலா

வெற்றி மலர் புகழ் அகிலா

மலர் காதலித்தது என்னவோ வெற்றியின் அண்ணனைத்தான். ஆனால், கல்யாணத்துக்கு முதல் நாள் ஒரு விபத்தில் அவன் இறந்துவிட, வீட்டார் வெற்றிக்கு மலரை திருமணம் செய்து வைக்கிறார்கள். ரொம்ப நாள் இருவருமே பேசாமல் இருந்து வரும் நேரத்தில் இவர்கள் போலவே தங்கை அகிலாவுக்கும், புகழுக்கும் யதேச்சையாகத் திருமணம் நடந்து விடுகிறது. இவர்கள் பேசாமல் மட்டும் இல்லை, ஒரே அறைக்குள் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். அகிலாவுக்கு புகழ் மீது வெறுப்பு...புகழுக்கு அகிலாவை பிடிக்கவே இல்லை.

 முதலிரவு ஸ்டார்டிங் டிரபுள்

முதலிரவு ஸ்டார்டிங் டிரபுள்

இப்போது இரு ஜோடிகளும் ஓகே என்கிற அளவுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் இவன்தான் புருஷன்... இவள்தான் மனைவி என்கிற நினைவுக்கு வந்தபோதும். அது மட்டும்தான்.. அதாவது முதலிரவு மட்டும்தாங்க.. நடக்கவே மாட்டேங்குது. வெற்றியும் மலரும் காதலைச் சொல்லிக்கொண்டாலும், அவர்களுக்குள்ளும் இதே ஸ்டார்டிங் டிரபுள்தான். அகிலா புகழுக்குள் அகிலா காதலை சொல்லிவிட்டாள், புகழ் இன்னும் அதை வெளிப்படையா சொல்லலை.

 காயம் கன்னத்தில் முத்தம்

காயம் கன்னத்தில் முத்தம்

பொண்டாட்டியை கேவலமா பேசினவனை சும்மா வெளுத்துட்டு வந்த புகழை, எதிர்பாராதவிதமா அதே ஆள், வண்டியில் இருந்து புகழ் விழும்படி ஏற்பாடு செய்துடறான். பைக்கில் இருந்து விழுந்த புகழுக்கு பலத்த காயம். கால் நடக்க முடியலை. தாங்கி தாங்கித்தான் நடக்க முடியுது.ஒரு முறை நடக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்த புகழுக்கு, கைக்கொடுக்கப் போகலாம் என்று பொண்டாட்டி அகிலா போக, அவன் மேல் விழுந்து கன்னத்தில் முத்தம் பதித்து விடுகிறாள்.

 கர்மம் அது எதுக்குடி?

கர்மம் அது எதுக்குடி?

ஏய்.. அகிலா.. அது எதுக்கு அந்த கர்மத்தை குடுத்தேடின்னு கேட்கிறான். எது என்று இவள் கேட்க, அதுதான் அது.. கர்மம் என்று மறுபடி சொல்கிறான் புகழ். என்னன்னு தெளிவா சொல்லு.. அது அதுன்னா என்ன குடுத்தேன் என்று அகிலா கேட்க.. அதுதாண்டி அந்த கர்மம் முத்தம் அதை எதுக்கு குடுத்தேன்னு கேட்கிறான். இத பாருய்யா.. கால் ஸ்லிப்பாகி, கன்னத்துல லிப்பாயிருச்சு. அவ்ளோதான்.. வேணாம்னா நீ வச்சுக்காதே. திருப்பி என்கிட்ட குடுத்துரு என்று அவன் முகத்தை நோக்கி இவள் கன்னத்தை காண்பிக்கிறாள்..

 கவர்ச்சி இளசுகள்

கவர்ச்சி இளசுகள்

அம்மா அகிலாண்டேஸ்வரி பிரம்மா கோடி... வேணாம் தாயே.. இனிமே அதை பத்தி பேசவே மாட்டேன்.. ஆளை விடு என்று கும்பிட்டு போடுகிறான் புகழ. இப்படியான காட்சிகள்.. இப்படியான பிரச்சனைகள் மட்டும்தான் ஈரமான ரோஜாவே சீரியல் முழுக்க இருக்கிறது. இளசுகளைக் குறிவைத்தே எடுக்கப்பட்டு வரும் சீரியல் இது.விஜய் டிவி நினைத்தபடியே இளசுகள் இதை விரும்பி பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X