Don't Miss!
- News
செல்ஃபி புள்ளை! மலை பூங்காவின் "கேமராவை" தூக்கிய கரடி.. ஒன்னு ரெண்டு இல்ல 400 போட்டோ எடுத்து அசத்தல்
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஈரமான ரோஜாவே தொடர் சீசன் 2... விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பு
சென்னை : ஈரமான ரோஜாவே தொடர் கடந்த 2018 முதல் விஜய் டிவில் ஒளிபரப்பாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.
Recommended Video
807 எபிசோட்களுடன் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இந்த தொடர் நிறைவு பெற்றது.
ஆனந்தம் விளையாடும் வீடு... உணர்வுப்பூர்வமான படமாக இருந்தது.. ரிவ்வியூ கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!
இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து தற்போது தொடரின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என பட்டையை கிளப்பி வருகிறது. வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி தொடர்களுக்கும் பெயர் போனதாக விளங்குகிறது. இந்த டிவியின் பிக் பாஸ், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளை போலவே தொடர்களும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

சிறப்பான தொடர்கள்
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களுக்கு இணையாக ஈரமான ரோஜாவே சீரியலும் சிறப்பான வரவேற்பை பெற்ற தொடராக விளங்குகிறது. பிற்பகலில் ஒளிபரப்பான இந்த தொடர் பெண்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

சிறப்பான ஈரமான ரோஜாவே தொடர்
இந்நிலையில் கடந்த 2018 ஜூலை 9ம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வரை 807 எபிசோட்களுடன் இந்த தொடர் நிறைவு பெற்றது. தொடரில் மலர் கேரக்டராக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பவித்ரா. இதேபோல வெற்றி கேரக்டரில் ஏராளமான ரசிகர்களை பெற்றார் திரவியம்.

நாயகி மலர் வாழ்க்கை
தொடரை பிரான்சிஸ், கதிரவன், ரிஷி மற்றும் ரவி பிரியன் இயக்கியிருந்தனர். தொடருக்கு இசையமைத்திருந்தார் எம்ஆர். மலரின் வாழ்க்கையில் நிகழும் சுவாரஸ்யம், சோகம் உள்ளிட்டவற்றை இந்த தொடர் காட்சிப் படுத்தியிருந்தது.

ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு
இந்த தொடர் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது தொடரின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்த பிரமோவையும் வெளியிட்டுள்ளது. இந்த பிரமோவில் திருமணத்தின்போது அக்கா கடத்தப்பட, தங்கையின் கழுத்தில் தாலி ஏறுகிறது.

சீசன் 2 விரைவில் துவக்கம்
இதையடுத்து அவரது முந்தைய காதல், மீட்கப்பட்ட அக்கா என கதை நகரும் என தெரிகிறது. விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பப்பட உள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. துவக்கமே கல்யாணம், கடத்தல், மணப்பெண்ணான தங்கை, ஏமாற்றமடைந்த அக்கா என எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது இந்த தொடரின் பிரமோ.
-
கடவுளுக்கு ஆண்,பெண் எல்லாம் ஒன்று தான்.. எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை..ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு!
-
என் சின்னக்குட்டி வளர்ந்துவிட்டாள்...மகளின் பிறந்த நாளுக்கு அழகாக வாழ்த்து சொன்ன குஷ்பு !
-
ராஷ்மிகா மந்தனா, ராதிகா உடன் வாரிசு சக்சஸ் பார்ட்டி.. வெறித்தனம் காட்டும் தளபதி 67 லுக்கில் விஜய்!