என்னை ரொம்ப மோசமா திட்டுறாங்க.. ஐயம் வெரி ஹேப்பி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சுஜாதா!

சென்னை: சசிகுமார் இயக்கத்தில் வெளியான ஈசன் படத்தில் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனவர் சுஜாதா. இவரது டான்சும் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு கதறியவர்கள் ஏராளம். நடன இயக்குநராக பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியிருந்தாலும், சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியாக நடித்து வருகிறார். இதுகுறித்த தனது அனுபவங்களையும் சினிமா குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

சிறகடிக்க ஆசை: ஈசன் படத்தில் வந்தாலும், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வந்து குறைந்த நாட்களிலேயே நான் எல்லோருக்கும் பரிச்சையம் ஆகிவிட்டேன். குறைந்த எபிசோட்களில் நடித்தாலும் மக்கள் என்னை பார்த்து அடையாளம் கண்டு திட்டுகின்றனர். ஏன்மா நீ மீனாவை இந்த பாடு படுத்துற என்றும் கேட்கின்றனர் என சுஜாதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த சீரியலில் நடித்த பிறகு எனது நண்பர்கள் பலரும் எனக்கு போன் செய்து இதுதான் எனக்கு பிடித்த சீரியல் என தெரிவிக்கிறாங்க அத கேட்க ரொம்ப ஹேப்பி என்றார்.

Siragadikka aasai sindhamani sujatha interview sujatha

சின்ன பையன்: எனக்கு தெரிந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றேன். அப்போ ஒரு சின்ன பையன் என்கிட்ட வந்து இந்தா பாருங்க சிந்தாமணி நீங்க மீனாவை ரொம்ப சீண்டி பாக்குறிீங்க சரியில்லைன்னு சொல்லிட்டு போனான். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஒரு சின்ன பையன் கூட என்னை நியாபகம் வைத்து கேள்வி கேட்டதும் சிரிப்புதான் வந்தது. அந்தளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் ரீச் ஆகிருக்கு என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சிதான் என சுஜாதா தெரிவித்துள்ளார்.

நடனம்: சினிமாவில் நடன இயக்குநராக இருந்த அனுபவம் குறித்து தெரிவித்த சுஜாதா, சின்ன வயதிலேயே பாட்டு சத்தம், இசையின் ஓலி கேட்டாலே கால்கள் தானாக ஆட தொடங்கிடும். அப்படித்தான் எனக்கும் நடனமும் பழகி விட்டது. பள்ளிக்கூடம் படிக்கும்போதே டான்ஸ் ஆடி பழகிவிட்டேன். பிறகு அதுவே சினிமாவில் இருக்க பக்கபலமாக இருந்தது என சுஜாதா தெரிவித்தார்.

வில்லன்: வெள்ளித்திரையில் ஹீரோ- ஹீரோயின்களை தாண்டி வில்லன்களை பற்றிதான் அதிகம் பேசுவார்கள். அதேபோன்று சீரியல்களில் ஹீரோ - ஹீரோயின்கள் இருந்தாலும் வில்லனாக நடிப்பவர்களுக்கு தான் மவுசு அதிகம். வில்லனாக நடித்தால் தான் மக்களிடம் ரீச் ஆக முடியும். அப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ண முடியாது. நான் விரும்பி தான் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து வருகிறேன் என சுஜாதா தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் மக்களை மகிழ்விக்க எல்லாவிதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் வந்திடுச்சு கொஞ்சம் கூட காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி பிடித்து நடித்தேனோ அதேபோன்று தான் வானத்தைபோல சீரியலில் கோமதி கதாப்பாத்திரமும் மனதுக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தது என தெரிவித்தார்.
சிறகடிக்க சீரியலில் இந்த அளவிற்கு என் கதாப்பாத்திரம் ரீச் ஆகியிருக்குன்னா அதற்கு முக்கிய ரோல் குமரன் சார் தான். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார் சுஜாதா.

Read more about: sujatha சுஜாதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X