மகா கல்யாணம் முடிஞ்சிடுச்சே! இளவரசியின் நிலை என்னவாகும்?

By Mayura Akilan

இளவரசியின் கணவன் சுப்ரமணியன் எதிர்பாராத தருணத்தில் மகாவின் கழுத்தில் தாலி கட்டுகிறான். இதுநாள் வரை ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறிக்கொண்டிருந்த சுப்ரமணியன் மகாவின் சொத்துக்களை காப்பாற்ற அவளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவளை திருமணம் செய்து கொள்கிறான்.

அதேநேரத்தில் இளவரசி மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக தெரியவருகிறது. மகாவை திருமணம் செய்து கொண்டது போல ஏற்கனவே கனவு கண்ட இளவரசி எப்படி இதை ஏற்றுக் கொள்வாள் என்பது தெரியவில்லை.

அதேநேரத்தில் குழந்தை பெறமுடியாத நிலையில் உள்ள இளவரசியின் தங்கை ஜெயந்தி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறாள். அதற்காக திருட்டுத் தொழில் செய்யும் பெண்ணை தேர்வு செய்கிறாள் அவளது கணவன்.

மகாவின் சைகை

மகாவின் சைகை

தாலி கட்டி திருமணம் செய்தாலும் ரிஜிஸ்டர் திருமணம் செய்ய வேண்டும் என்பதை சைகையினால் உணர்த்துகிறாள் மகா. அந்த நேரத்தில் இளவரசியிடம் இருந்து சுப்ரமணிக்கு போன் வரவே அவசரமாக வீட்டுக்குப் போகிறான்.

இளவரசியின் சந்தோசம்

இளவரசியின் சந்தோசம்

இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் சந்தோசத்தை ரசகுல்லா கொடுத்து சுப்ரமணியிடம் சொல்கிறாள் இளவரசி. எனக்கு துரோகம் செய்ய மாட்டீங்களே என்றும் கேட்கிறாள். அதற்கு தர்மசங்கடமான நிலையில் தவிக்கும் சுப்ரமணி இளவரசியை தவிக்கவே நினைக்கிறான்.

ரத்தம் கொடுக்க

ரத்தம் கொடுக்க

மகாவிற்கு ரத்தம் தேவைப்படுவதாக டாக்டர் கூறவே, தான் ரத்தம் கொடுப்பதாக கூறுகிறாள் இளவரசி. ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண் ரத்தம் கொடுக்கக் கூடாது என்று கூறி சமாளித்து விடுகிறான் சுப்ரமணி.

காணாமல் போன பூஜா

காணாமல் போன பூஜா

குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய மருமகள் பூஜா எங்கேயிருக்கிறாள் என்று தெரியாமல் மாமியார் தமிழரசியும் மாமனாரும் கவலைப்படுகின்றனர். பூஜா காணமல் போனதற்கான காரணம் வீட்டில்தான் இருக்கிறது என்று கூறி தேடச் சொல்கிறார் பூஜாவின் மாமனார்.

மகாவின் எதிர்காலம்

மகாவின் எதிர்காலம்

மகாவின் சொத்துக்களை குறிவைத்து அவளை விபத்தில் சிக்கவைத்த மகாவின் உறவினர்கள், சுப்ரமணியத்தை குறிவைத்து தாக்குகின்றனர். சொத்துக்கு ஆசைப்பட்டுதான் மகாவின் கழுத்தில் தாலி கட்டியதாக குற்றம் சாட்டுகின்றனர். அதை மறுக்கும் சுப்ரமணியன், மகாவை கார் வைத்து விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப் போவதாக கூறுகிறான்.

மகாவின் ஆசை

மகாவின் ஆசை

மகா ஆசைப்பட்டது போலவே ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்கிறான். சட்டப்படி அவளுக்கு கணவனாக ஆகிறான். சொத்துக்களுக்கும், டிரஸ்டுக்கும் உரிமையாளர் ஆகிறான்.

950 வது எபிசோடுகளை நோக்கி

950 வது எபிசோடுகளை நோக்கி

மகாவை திருமணம் செய்து கொண்டது தெரிந்தால் இளவரசியின் நிலை என்னவாகும்? குழந்தையில்லாத ஜெயந்திக்கு வாடகைத்தாய் மீது குழந்தை பிறக்குமா? மகா உயிர்பிழைத்து எழுவாளா? காணாமல் போன பூஜா மீண்டும் வருவாளா? என பல கேள்விகளுடன் 950வது எபிசோடுகளை நோக்கி நகர்கிறது இளவரசி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X