கண் முன்னே மனைவி த*கொலை.. மனைவியே துணையென வாழும் கணவன்.. டிவி நிகழ்ச்சியில் உருக வைத்த உண்மை

சென்னை: தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளுக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நீயா நானா, தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகளில் வரும் மனிதர்களும், அவர்களது வாழ்க்கையும் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. அப்படித்தான் கடந்த வாரத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் கலங்கடிக்க செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சின்னத்திரைக்கென்று எப்போதுமே தனி மவுசு உண்டு. ஆரம்பத்தில் தமிழ் சேனல்கள் பெரும்பாலும் சீரியல்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்தன. காலம் செல்ல செல்ல பல ரியாலிட்டி ஷோக்களும் முளைக்க தொடங்கின. அவற்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்று உயரே சென்றவர்கள் எக்கச்சக்க பேர் இருக்கிறார்கள். இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன்கூட ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர்தான்.

விவாத நிகழ்ச்சிகள்: ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கை அடிப்படையாக வைத்து உருவாகிக்கொண்டிருந்தன. ஆனால் அதில் முதல் மாற்றமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி விவாத நிகழ்ச்சிக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கியது. அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிரதான காரணம் என்றால் கோபிநாத். அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற பெயரிலும் விவாத நிகழ்ச்சி நடந்துவருகிறது. இப்போதைக்கு தமிழ்நாட்டில் இந்த இரண்டு விவாத நிகழ்ச்சிகளுக்கு இடையேதான் டிஆர்பி போட்டி போய்க்கொண்டிருக்கிறது.

Emotional Story on Tamizha Tamizha Man Recalls Losing His Wife After Love Marriage
Photo Credit:

உருக வைத்த உண்மை: இந்நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் கணவனை இழந்த மனைவிகள், மனைவியை இழந்த கணவர்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய நபர், "நானும் எனது மனைவியும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். மனைவியின் வீட்டில் ஒத்துக்கொள்ளாததால் நாங்கள் ஓடி வந்துதான் திருமணம் செய்துகொண்டோம். பெண் வீட்டிலிருந்து கேஸ் கொடுத்தார்கள். ஆனால் எனது மனைவி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.

நடந்த ரிசப்ஷன்: பிறகு பத்து நாட்கள் கழித்து எங்களுக்கு ரிசப்ஷன் வைத்தார்கள். அதை முடித்துவிட்டு எங்கள் வீட்டுக்கு அவர்கள் வீட்டிலிருந்து வந்து பார்த்தபோது, 'வீடு வசதி குறைவாக இருக்கிறது' என சொல்லி எனது மனைவியையும், என்னையும் அவர்களது வீட்டிலேயே இருக்க சொன்னார்கள். ஆனால் எனது அக்காவுக்கு திருமணம் ஆகாததால் நான் அங்கே செல்ல முடியாத சூழ்நிலை. எனது மனைவி அவரது வீட்டில்தான் இருந்தார். அந்த சமயத்தில் எனது மனைவி ஃபோன் செய்து இங்கே வந்துவிடு மாமா என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் அங்கே வந்து இருப்பது சரியாக இருக்காது என சொல்லிக்கொண்டிருந்தேன்.

வீடியோ காலில் த*கொலை: ஒருபக்கம் நீ இங்கே இருந்தால் உன்னுடைய கணவர் இங்கே வந்துவிடுவார் என்று சொல்ல; நான் வரமாட்டேன் என மறுபக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது எனது மனைவி தினமும் வீடியோ காலில் பேசுவார். அப்படி ஒரு நாள் எனக்கு வீடியோ கால் செய்தார். நான் எடுத்து பேசியபோது ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த தூக்கில் தொங்கி உயிரை விட்டார். அவர் உயிரை விட்டதிலிருந்து என்னை இன்னொரு திருமணம் செய்துகொள் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் மனைவியே துணை என்று கையில் டாட்டூ போட்டு எனக்கு இன்னொரு திருமணத்தில் விருப்பம் இல்லை என உணர்த்திக்கொண்டிருக்கிறேன்" என்றார். இது அனைவரையும் கலங்க செய்திருக்கிறது.

More from Filmibeat

Read more about: zee television
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X