டீன் ஏஜ் பருவத்தினர் தற்கொலை செய்வது சென்னையில் அதிகம்: அதிர்ச்சி ரிப்போர்ட்

By Mayura Akilan

மனஅழுத்தம், மன உளைச்சல் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சிறு குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம்.

அதிலும் டீன் ஏஜ் எனப்படும் பதின் பருவத்தினரில் 70 சதவிகிதம் பேர் மனஅழுத்தத்துடன் இருப்பதாக கூறி அதிர்ச்சியளிக்கிறது ஆய்வு முடிவு. இதன் காரணமாக ஏராளமான இளம் பருவத்தினர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.

விஜய் டிவியின் என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் பதின் பருவத்தினரின் சிக்கல்கள், அவர்களின் தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களும், பதின் பருவத்தினரும் தங்களுக்கு உள்ள சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

புரிந்து கொள்வது சிக்கல்

புரிந்து கொள்வது சிக்கல்

இன்றைய பதின் பருவத்தில் உள்ள பிள்ளைகளை புரிந்து கொள்வது என்பது சிரமமாக இருக்கிறது என்கின்றனர் பெற்றோர்கள். டீன் ஏஜ் பருவத்தினரின் தேவைகள் பெரிதாக இருக்கின்றன.

செல்போன் முதல் லேப் டாப் வரை

செல்போன் முதல் லேப் டாப் வரை

செல்போன், விலை உயர்ந்த ஆடைகள், மல்ட்டிபிளெக்ஸ், வீடியோ கேம்ஸ், சமூகவலைத்தளங்கள், நவீன சாதனங்கள், தொலைக்காட்சி என பெரிய பட்டியலே நீள்கிறது.

செல்போன் விளையாட்டிற்கு அடிமை

செல்போன் விளையாட்டிற்கு அடிமை

பதின் பருவத்தினருக்கு செல்போன் முக்கியமான விசயமாக மாறிவிட்டது. அதில் உள்ள விளையாட்டிற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். ஒரு சிலர் 6 முதல் 7 மணிநேரம் கூட விளையாடுகின்றனர். 13 வயது சிறுவன் ஒருவன். ஃபேஸ்புக், டுவிட்டர், என சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாகக் கிடக்கின்றனர்.

சங்கேத வார்த்தைகள்

சங்கேத வார்த்தைகள்

சமூக வலைத்தளங்களில் பேசிக் கொள்ளும் போது பல சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

@@@ அப்பா பக்கத்துல இருக்காங்க
9 அப்பா பாக்குறாங்க
பி9 பாஸ் கவனிக்கிறார்
RYS / நீங்க தனியா இருக்கீங்கள?
182 I hate you
4 Ao for audults only
6y செக்ஸி என பல வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன.

பாலியல் துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல்

42 சதவிகித பெண்கள் ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால் பல இளம் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் பலருக்கும் எதிர்காலம் பற்றிய பயம் அதிகம் இருக்கின்றது.

தற்கொலை எண்ணம் அதிகம்

தற்கொலை எண்ணம் அதிகம்

இன்றைக்கு டீன் ஏஜ் பருவத்தில் உள்ள 49 சதவிகிதம் பேர் தற்கொலை எண்ணத்தால் அவதிப்படுகின்றனர். 70 சதவிகிதம் பேர் மனஅழுத்தம் உடையோர். 70 சதவிகிதம் பேருக்கு முன்கோபம் அதிகம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 15 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினர் 18, முதல் 19 சதவிகிதம் வரை தற்கொலை எண்ணம் வருவதாக கூறியதாக சொன்னார் மனநல மருத்துவர் யமுனா

தனிமை பயம்

தனிமை பயம்

பெற்றோர்கள் வீட்டில் இல்லாவிட்டால் அவர்களுக்கு தனிமை வாட்டுகிறது. பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமானது என்றனர் நிபுணர்கள்.

தனியாக இருக்கிறோம், நாம் சரியாகத்தான் இருக்கிறோமா, எதிர்காலம் பற்றிய பயம் இதனால் தற்கொலை எண்ணம் வருகிறது என்று கூறும் மருத்துவர்கள் இதற்கான வடிகாலகத்தான் சமூகவலைத்தளங்கள், செல்போன், கேம்ஸ் போன்றவர்றிர்குள் மூழ்கி விடுகின்றனர் என்றனர்.

சென்னை நம்பர் 1

சென்னை நம்பர் 1

இந்தியாவிலேயே டீன் ஏஜ் பருவத்தினர் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் நகரமாக சென்னை உள்ளது என்று சமீபத்தில் தெரியவந்துள்ளது. சென்னையில் 10 லட்சம் பேரில் 2348 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெங்களூரு 2 வது இடம் மும்பை 3 வது இடத்தில் உள்ளது.

மனஅழுத்தம்தான் அவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரை கொண்டு செல்கிறது. படிக்க சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவனின் பெற்றோர்கள் தங்களின் சோகத்தை பகிர்ந்து கொண்டனர்.

மதுவுக்கு அடிமை

மதுவுக்கு அடிமை

டீன் ஏஜ் பருவத்தினர் 45 சதவிகிதம் பேர் மாதம் 5 முறை மது குடிக்கின்றனர். மனஅழுத்தம் காரணமாகவே இந்த பழக்கம் வருகிறது. போதை மறுவாழ்வு இயக்கத்தைச் சேர்ந்த வரதன்.

இளைஞர்களின் எதிர்காலம்

இளைஞர்களின் எதிர்காலம்

படிக்க வசதியிருந்தும் மனஅழுத்தத்தினால் பாதிக்கும் இளம் பருவத்தினர் ஒருபக்கம் இருந்தாலும், ஏழ்மை நிலையிலும் டாக்டருக்கு படித்து வரும் இளைஞரும் இந்த நிகழ்ச்சி பேசி இளம் பருவத்தினருக்கு தெம்பூட்டினார்.

பெற்றோர்கள் புரிந்து கொள்ளுங்கள்

பெற்றோர்கள் புரிந்து கொள்ளுங்கள்

இன்றைய பெற்றோர்கள் எல்லோருமே டீன் ஏஜ் பருவத்தைக் கடந்துதான் வந்திருப்பார்கள். எனவே தங்கள் பிள்ளைகளின் தேவையை புரிந்து கொண்டு சிக்கலை தீர்ப்பது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது என்ற கருத்து இந்ந நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X