Engal anna film: சன் டிவியில் எங்கள் அண்ணா.. விஜயகாந்த்தைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு!

சென்னை: சன் டிவியின் தினம் தோறும் மதிய நேர படமாக ஒரு திரைப் படத்தை ஒளிபரப்புவார்கள். அது பகல் நேர சீரியல்கள் முடிந்த அடுத்த நிமிஷம் ஒளிபரப்பட்டும் படம். அந்த வரிசையில் இன்று கலைஞர் விஜயகாந்த் நடித்து இருக்கும் எங்கள் அண்ணா திரைப் படம் ஒளிபரப்பாகி வருகிறது.

நகைச் சுவை, குடும்ப செண்டிமென்ட்... முக்கியமாக அண்ணன், தங்கை சென்டிமெண்ட் நிறைந்த இந்த படம், விஜயகாந்த் நடிப்புக்கு புகழ் சேர்த்த இன்னும் ஒரு படம் என்று சொல்லலாம். விஜயகாந்த் ரொம்ப கம்பீரமாக தோன்றி நடித்து இருப்பார்.

நடிகர் பிரபு தேவாவுக்கும், ஸ்வர்ண மால்யாவை மீண்டும் நடிகையாக பார்ப்பதற்கும் வாய்ப்பு அளித்த படம் எங்கள் அண்ணா ஸ்வர்ணமால்யா மெலிந்து மிகவும் அழகாக இருப்பார்.

மாமன் மச்சான்ஸ்

மாமன் மச்சான்ஸ்

இந்த படத்தில் அறிமுகமான புதுமுக நடிகை நமீதா, இதற்குப் பிறகுதான் எல்லாரும் என் மாமன் மச்சான்ஸ் என்று கொஞ்சு தமிழில், பேச ஆரம்பித்தார். நல்ல உயரம், ஒல்லியான உடல்வாகு என்று மிக அழகான தோற்றம் கொண்ட நமீதா, வேற லெவலுக்கு போயிருக்க வேண்டியவர். சரியான படங்களை தேர்வு செய்து நடிக்காததால் ரசிகர்கள் மனதில் தான் பிடித்த இடத்தை கோட்டை விட்டார்.

சென்டிமென்ட் விஜயகாந்த்

சென்டிமென்ட் விஜயகாந்த்

ஆண்டாள் அழகர் ஃபிலிம்ஸ் என்று தன்னுடைய சொந்த கம்பெனி மூலம் விஜயகாந்த் இந்த படத்தை எடுத்து ,மாபெரும் வசூலைக் குவித்தது இந்த படம். கம்பீர விஜயகாந்த், சென்டிமெண்ட் விஜயகாந்த் என்று புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் ரசிகர்களை மீண்டும் மீண்டும் என்று திரைக்கு வரவைத்து இருந்தார். கூடவே நடிகர் வடிவேலுவுடன் காமெடி வேறு. நடிகர் பாண்டியராஜ், எம் எஸ், பாஸ்கர், வடிவேலு மூன்று பேரும் சேர்ந்து செய்யும் பட்டாசு கடை காமெடி காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி.

பிரபு தேவா கார்த்திக்

பிரபு தேவா கார்த்திக்

எங்கள் அண்ணா படத்தின் மூலம், நடிகர் கார்த்திக்குக்கு மீண்டும் ஒரு நல்ல என்ட்ரி கொடுக்க விரும்பின கேப்டன், தனது படத்தில் அவரை நடிக்க வைத்தார். ஆனால், கார்த்திக் எப்போதும படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததாகவும், அதனால் மனம் நொந்து போன விஜயகாந்த், அவரை நீக்கிவிட்டு, உடனடியாக பிரபு தேவாவை நடிக்க வைத்ததாகவும்கூட அப்போது செய்திகள் பரவின. ஆனால்,அந்த கதாபாத்திரத்தில் நடித்த பிரபு தேவாவுக்கு நல்ல புகழ் கிடைத்தது.

விஜயகாந்த் கேப்டன்

விஜயகாந்த் கேப்டன்

கேப்டன் விஜயகாந்த் என்று சினிமா உலகத்தில் அனைவரும் பட்டம் வைத்து பேசும் அளவுக்கு, வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல மனிதர் விஜயகாந்த். அதே சமயம் கம்பீரம் சற்றும் குறையாதவர். சினிமா வாய்ப்பு தேடி அலையும் கலைஞர்களுக்கு என்று எந்த நேரமும் இலவச சாப்பாடு போட்டு, அவர்களின் பசியாற்றி சினிமா கலைஞர்களை வளர்த்து விட்ட அற்புத மனிதர்.

அந்த மனிதரின் கள்ளம் கபடம் இல்லாத அந்த சிரிப்பையும் இப்போது பார்க்கையில் மீண்டும் அவரை எப்போது இப்படி பார்ப்போம் என்று மனம் ஏங்குகிறது. நல்ல உள்ளம் கொண்ட அந்த கலைஞனை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X