எதிர் நீச்சல் சீரியல் நடிகை கனிகாவின் வீடா இது? அடடா இவ்வளவு பெருசா.. மலைக்க வைக்கும் பங்களா!
சென்னை: எதிர் நீச்சல் சீரியலில் நடிக்கும் கனிகாவின் வீடு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அவரின் வீடு சென்னையிலும், கேரளாவிலும் அமைந்து உள்ளது.
தமிழில் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் டாப் சீரியல் என்றால் அது எதிர் நீச்சல் சீரியல்தான். பெண்கள் உரிமை, விடுதலை பற்றி பேசும் இந்த சீரியல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த தொடர் தற்போது தமிழ்நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

சீரியல்
வாஸ்து பெண் விடுதலை, பெண்களுக்கு எதிராக திணிக்கப்படும் அழுத்தங்கள், பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி என்று பல விஷயங்களை பற்றி இந்த சீரியல் பேசுகிறது. இதனால் பெரிய அளவில் இந்த சீரியல் பெண்கள் இடையிலும் குடும்பத்தினர் இடையிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் விரும்பி பார்க்கும் சீரியலாகவும் இது இருக்கிறது. பல்வேறு முக்கிய விஷயங்களை பேசுவதால் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக இதில் குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்து கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்
மேலும் அவருக்கு மனைவியாக நடிக்கும் கனிகா கதாபாத்திரமும் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக குணசேகரன் பாத்திரத்தை கனிகா எதிர்கொள்ளும் விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் கனிகாவின் வீடு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அவரின் வீடு சென்னையிலும், கேரளாவிலும் அமைந்து உள்ளது. இவர் மலையாள படங்களில் நடித்தவர் என்றாலும் தமிழ்நாட்டைதான் பூர்வீகமாக கொண்டவர். மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே டிவிஎஸ் பள்ளியில்தான் இவர் படித்தார்

கனிகா
தமிழில் 5 ஸ்டார், ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்து பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அதை தொடர்ந்து மலையாளத்தில் பழசி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து இவருக்கு மழையால் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இவர் பல கோடிகளை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு சொந்தமாக சென்னையில் பிரம்மாண்ட வீடு உள்ளது. மதுரையில் ஒரு சிறிய வீடும், கேரளாவிற்கு செல்லும் சமயங்களில் வசிக்க ஒரு வீடும் உள்ளது.

இல்லை
இவருக்கு வாஸ்து மீது நம்பிக்கை இல்லை என்பதால் வாஸ்து பார்த்து வீடு கட்டவில்லை. மாறாக இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அதனால் வீட்டிற்குள் நிறைய கடவுள் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. உள்ளே புத்தர் சிலை, பாபா சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து தரையிறக்கப்பட்ட பர்னிச்சர்கள் வீட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வீடு முழுக்க மினிமலிசம் பாணியில் கட்டப்பட்ட வீடு. அதாவது சிறிய சிறிய அளவிலான, அவசியமான பொருட்கள் மட்டும் இவரின் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக மஞ்சள் நிறத்தில் இவரின் வீடு முழுக்க பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் வீட்டின் மதிப்பு ஒன்றரை கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரின் சொத்து மதிப்பு 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











