பாவம்யா.. இருட்டு அறையில் விடிய விடிய அழுதேன்.. சுக்குநூற உடைந்து இருக்கேன்.. ஹரிப்ரியா பேட்டி!

சென்னை: சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்களில் சீரியலில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹரிப்ரியா. கணவரை பிரிந்து தனியாக தனது மகனை போராடி வளர்த்து வரும் ஹரிப்ரியா தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், சிங்கிள் மதராக வாழ்வது எளிதான விஷயம் அல்ல; அது ஒரு பொறுப்பு மட்டுமல்ல, பல்வேறு சவால்களும் ரிஸ்க்குகளும் நிறைந்த பயணமாகும். ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது என்பது உடல், மனம், பொருளாதாரம் என பல தளங்களில் போராட வேண்டிய நிலையை உருவாக்குகிறது. சமூகம் எப்போதும் ஒரு குழந்தையின் நடத்தையைக் கொண்டு அதன் பெற்றோரின் வளர்ப்பை மதிப்பீடு செய்யும். "இவர்களின் அம்மா சரியாக வளர்க்கவில்லையா?" என்ற கேள்வி எழுவது இயல்பாகவே உள்ளது.

Ethir Neechal Serial Haripriya interview
Photo Credit:

ஹரிப்பிரியா: இதுவே ஒரு சிங்கிள் மதரின் மனதில் எப்போதும் அழுத்தமாக இருக்கிறது. "என் மகனைப் பார்த்து யாரும் நாளை குறை சொல்லக்கூடாது" என்ற எண்ணமே ஒரு தாயை அதிக பொறுப்புடன் செயல்பட வைக்கிறது. குழந்தை நல்ல பாதையில் சென்றால் அது பெருமை; ஆனால் தவறான வழியில் சென்றால் அந்த குற்றச்சாட்டு முழுவதும் தாய்மீதே விழும். அந்த நிலையை சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்று என்பதால், சிங்கிள் மதராக இருப்பது ஒரு உணர்ச்சி ரீதியான சவாலாகவும் பார்க்கப்படுகிறது.

விடிய விடிய அழுதேன்: இந்த நிலைக்கு வர பல பெண்கள் கடுமையான வாழ்க்கைப் போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்கள், இழப்புகள், மன அழுத்தங்கள் இவை அனைத்தையும் கடந்து தான் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். பலமுறை உடைந்து அழுதும், அந்த வலியிலிருந்து மீண்டும் எழுந்தும் தான் அவர்கள் தைரியம் கற்றுக்கொள்கிறார்கள். அழுவது பலவீனத்தின் அடையாளம் அல்ல, சிலர் அழுவதை பலவீனமாக பார்க்கலாம், ஆனால், உண்மையில் அது ஒரு மனிதனை உள்ளிருந்து பலமாக மாற்றும் சக்தி கொண்டது. ஒருபோதும் உடையாமல் தொடர்ந்து ஓடுவது சாத்தியமில்லை. வாழ்க்கையில் சில நேரங்களில் உடைந்து விழ வேண்டியதுதான்; ஆனால் அதிலிருந்து மீண்டும் எழுந்து நிற்கும் போது தான் உண்மையான வலிமை உருவாகிறது.

தனிமை தான் சிறந்தது: ஒரு காலத்தில் சினிமா பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதை கூட வெறுத்து தனியாக அறையில் விடிய விடிய அழுது இருக்கிறேன். அப்படி உடைந்து அழுது, பல துன்பங்களையும், சவால்களையும் கடந்து இன்று மன வலிமையுடன் இருக்கிறேன் என்றார். தொடர்ந்து தனியாக வாழ்வது குறித்து பேசிய ஹரிபிரியா, தனிமையை நான் மிகவும் விரும்புகிறேன். வாழ்க்கையில் தனியாகத்தான் வந்தோம் தனியாகத்தான் போகப்போகிறோம் என்று ஹரிப்பிரியா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X