Ethirneechal 2 serial: லவ்வா.. அரேஞ்சா? திருமணம் பற்றிய கேள்விக்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகை பளீச் பதில்!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியல் அண்மையில் முடிவடைந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியல் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஜனனி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை பார்வதி வெங்கடரமணன் தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் சிறைக்கு சென்றதோடு முடிக்கப்பட்டு, ஆறு மாசத்துக்கு பிறகு எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. பழைய கதையின் தொடர்ச்சியாகவே தொடங்கப்பட்ட இந்த சீரியலில், இதுநாள் வரைக்கும் வீட்டுக்குள் அடங்கி இருந்த பெண்கள் சுயமாக அவர் அவர்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள். அதாவது குணசேகரன் ஜெயிலுக்கு போனதால், விசாலாட்சி மற்றும் அவரது தம்பிகள் பரிதவித்து வருகின்றனர்

Ethirneechal 2 parvathy venkitaramanan interview

எதிர்நீச்சல் தொடர்கிறது 2: குணசேகரனை வெளியில் கொண்டு வர, தர்ஷன் மற்றும் போஸ்டர் பெரியசாமியின் இளைய மகள் அன்புக்கரசிக்கு திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில், தர்ஷன், பார்கவி என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றி இருக்கிறார் என்பது தெரியவர, தர்ஷன் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி பார்க்கவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிளான் செய்கின்றனர். அந்த வகையில் தர்ஷன் மற்றும் பார்க்கவிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைத்து விடுவார்கள். இப்படி இந்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

லவ்வா.. அரேஞ்சா?: இப்படி எதிர்நீச்சல் சீரியல் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்க, சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் நடிகைகளும் கலந்து கொண்டனர். இதில், எதிர்நீச்சல் சீரியல் 2ல் நாயகியாக பார்வதி வெங்கடரமணன் கலந்து கொண்டார். இவர், இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இந்த ரோலில் மதுமிதா நடித்திருந்தார்.

முரட்டு சிங்கிள்: சன் குடும்பம் விருது விழாவிற்கு பின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், நீங்க சிங்கிளா இல்லை கமிட்டடா என கேட்டதற்கு, நான் முரட்டு சிங்கிள் என்றும், எதிர்காலத்தில் காதல் திருமணம் செய்யப்போகிறீர்களா அல்லது பெற்றோர் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, எதுக்கு இந்த கேள்வி, நான் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா? நான் திருமணமே செய்யப்போவதில்லையே, எப்போதும் ஜாலியா முரட்டு சிங்கிளாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

முரட்டு சிங்கிள்: சன் குடும்பம் விருது விழாவிற்கு பின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், நீங்க சிங்கிளா இல்லை கமிட்டடா என கேட்டதற்கு, நான் முரட்டு சிங்கிள் என்றும், எதிர்காலத்தில் காதல் திருமணம் செய்யப்போகிறீர்களா அல்லது பெற்றோர் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, எதுக்கு இந்த கேள்வி, நான் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா? நான் திருமணமே செய்யப்போவதில்லையே, எப்போதும் ஜாலியா முரட்டு சிங்கிளாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

More from Filmibeat

Read more about: ethirneechal 2 interview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X