நந்தினியை மிரட்டும் கதிரா இது? வைஷ்ணவியுடன் சேர்ந்து 'கட்டா குஸ்தி 2' பாடலுக்கு வைப் செய்த விபுராமன்

சென்னை: சன் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் தொடர் தான்'எதிர்நீச்சல் தொடர்கிறது'. இந்த சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கதிர் என்ற முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிகர் விபு ராமன் நடித்து வருகிறார்.

சீரியலில் இவரது காட்சிகள் இல்லாமல் கதையே நகராது என்ற அளவிற்குத் தனது அட்டகாசமான நடிப்பை விபு ராமன் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, தனது மனைவியான நந்தினியை அடக்குவது, பெண்களுக்கு மதிப்பு கொடுக்காமல் பேசுவது என இவரது ஆன்-ஸ்கிரீன் கதாபாத்திரம் பெண்களுக்குச் சற்று எரிச்சலை ஏற்படுத்தினாலும், இவரது எதார்த்தமான நடிப்பிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Ethirneechal Vibhu Raman dance
Photo Credit:

கிளுகிளு ஆட்டம்: சீரியலில் எப்போதும் விறைப்பாகவும் கோபமாகவும் வலம் வரும் விபு ராமன், நிஜ வாழ்க்கையில் செம்ம ஜாலியான மனிதர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், நடிகர் விபு ராமனும் வைஷ்ணவியும் இணைந்து 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் குத்துப்பாடலான "சம்பவக்காரி நீதாண்டி" என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். கலர் கலரான சட்டைகளை அணிந்து, மிகவும் கவர்ச்சியாகவும், துள்ளலாகவும் இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் இளசுகளைப் பெரிதும் கவர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Ethirneechal Vibhu Raman dance
Photo Credit:

நெட்டிசன்கள் நக்கல்: தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரனின் மகள் தர்ஷினியைக் காணவில்லை என்று ஒட்டுமொத்த குடும்பமே சோகத்திலும் பதற்றத்திலும் மூழ்கிக்கொண்ட இருக்க, கதிர் இப்படி இன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்டிருப்பதைப் பார்த்த சீரியல் பிரியர்கள், கமெண்ட் செக்ஷனில் தங்களது பாணியில் நக்கலடித்து வருகின்றனர். அங்க அண்ணன் குணசேகரன் தன் மகளைக் காணோம்னு ராவணன்கிட்ட பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காரு, இங்க தம்பி கதிர் வைஷ்ணவியோட சேர்ந்து கூத்தாட்டம் போடுறாரோ? என்று நெட்டிசன்கள் ஜாலியாக விபு ராமனை வம்புக்கு இழுத்து வருகின்றனர். எது எப்படியோ, கதிரின் இந்த முற்றிலும் மாறுபட்ட 'டான்சிங் ஸ்டைல்' ரசிகர்களுக்கு ஒரு செம்ம எண்டர்டெய்ன்மெண்ட்டாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X