அச்சச்சோ.. ’எதிர்நீச்சல்’ சீரியல் நடிகையை எங்கெல்லாம் நாய் நக்குது பாருங்க.. தீயாக பரவும் வீடியோ!
சென்னை: ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கனிகா எதிர்நீச்சல் சீரியல் முதல் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீட்டில் குறும்புத்தனமாக செல்லப்பிராணிகள் உடன் விளையாடும் வீடியோக்கள் என தொடர்ந்து சோசியல் மீடியாவில் பதிவுகளை போட்டு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் கனிகா சீரியல் மற்றும் வெப் சீரிஸ்களில் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்.

கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து "யாதும் ஊரே யாவரும் கேளிர்" படத்தில் நடித்திருந்தார் அடுத்ததாக "வெப்பன்" எனும் படத்தில் நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியல்: இயக்குநர் திருச்செல்வம்இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் கனிகா மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்த வருகிறார். குணசேகரன் நடித்து வந்த மாரிமுத்து உயிரிழந்த நிலையில், அவருக்கு பதில் வேலூர் ராமமூர்த்தி கனிகாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அஜித், மாதவன் ஜோடி: ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகா சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாதவன் நடிப்பில் வெளியான எதிரி படத்தில் ஹீரோயினாக நடத்த இவர், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் குமார் மூன்று வேடங்களில் நடித்து வெளியான வரலாறு படத்தில் அப்பா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த கனிகா சமீப காலமாக சின்னத்திரையில் சீனியர் நடிகையாக நடித்து வருகிறார். சினிமாவில் மார்க்கெட் இழந்து விட்டால் நடிகைகள் சின்னத்திரை பக்கம் வந்து விடுவார்களே என ஆரம்பத்தில் ட்ரோல் செய்த ரசிகர்களும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களாகவே மாறி கனிகாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
நாய்க்குட்டி எங்க நக்குதுன்னு பாருங்க: செல்லப்பிராணிகளை ரொம்பவே ஆர்வத்துடன் வளர்த்து வரும் நடிகை கனிகாவிடம் நாய் குட்டிகள் ரொம்பவே பிரியமாகவும் பாசமாகவும் நடந்து கொள்கின்றன. லேட்டஸ்டாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கனிகாவின் கண்களை நாய்க்குட்டி ஒன்று நக்குவது போன்ற காட்சி இடம் பெற்று ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.
யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம்: இந்த வீடியோ பெட் லவ்வர்ஸ்க்கு மட்டுமே யாரும் கமெண்ட் பக்கத்தில் வந்து கண்ணுல நாய் நக்கினால் அதன் எச்சில் பட்டு பிரச்சனை வரும் என பாடம் எடுக்க வேண்டாம். எல்லாம் எங்களுக்குத் தெரியும். நாய் பிரியர்களுக்கு மட்டுமே இந்த வீடியோவின் உண்மையான அர்த்தமும் அன்பும் புரியும் என கேப்ஷனிலேயே தெளிவாக எச்சரிக்கை போர்டையும் மாட்டிவிட்டார் கனிகா...
நாய்க்குட்டியின் பெயர் என்ன தெரியுமா?: கனிகா வளர்த்து வரும் இந்த நாய்க்குட்டியின் பெயர் மேகி. மனம் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், அது செய்யும் சேட்டைகளால் அப்படியே எல்லா கவலையும் பறந்து விடும் என பதிவிட்டுள்ளார். நடிகை பூஜா ராமசந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் சூப்பரான வீடியோ கனிகா என கமெண்ட் போட்டு வருகின்றனர். உங்க முகப் பொலிவுக்கான ரகசியம் இப்போதான் தெரியுது என ரசிகர்கள் ஜாலியாக கலாய்த்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











